தழல் வாசகர் வட்டம் – புரட்டாதி 2016

தழல் வாசகர் வட்டம் – புரட்டாசி 2016

இடம்: மன்னார் பொது நூலகம்
நாள் : 08/ஒக்டோபர்/2016 சனிக்கிழமை
நேரம்: காலை 10.00 மணிக்கு

கலந்துகொள்ளும் வாசகர்கள் தங்கள் கவிதையை வாசிக்க நேரம் ஒதுக்கப்படும்….. அதே போல் நகைச்சுவைத் துணுக்குகள் சொல்லவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது….

அனைவரும் வருக…

வரலாற்று அபத்தம் – மாவை சேனாதிராஜா

#மாவை #கழுதை #என்னை_மன்னித்துவிடுங்கள்

தமிழரசுக் கட்சி தலைவர் என்ற வகையில் மாவையை எனக்குப் பிடிக்காவிட்டாலும் அவரது உரைகள் எனக்கு பிடித்தமானவை…

நேற்று அவர் பேச எழுந்து வரும் போது இருந்த ஆர்வம் ஐந்தே நிமிடத்தில் கரைந்துபோயிருந்தது. 30 நிமிடங்களுக்கு மேல் ஆற்றிய உரையில் 3முறை தான் சிறை சென்றதாக குறிப்பிட்டார்… பலமுறை கலை நிகழ்வுகள் பற்றி…. ஜெனிவா பயணம் பற்றிய சுயபுராணம்…

பேச்சில் ஒரு தொடர்ச்சியில்லை…. எதைப் பேசுவதென்றே அவர் ஆயத்தம் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இரண்டு முறை உரையை முடிக்க நினைத்தும் அவரால் அவரை கட்டுப்படுத்தமுடியவில்லை.. பலர் எழும்பிச்செல்ல , இன்னும் சிலர் தங்கள் பிள்ளைகளின் நிகழ்வுகளுக்காகப் பெருமூச்சுடன் காத்திருந்தனர்.

எத்தனை மேடை கண்ட மனிதன்…. இப்படி ஆகிவிட்டாரே என நினைக்கையில் மனம் வேதனைப்படுகிறது….

எதைப்பேசினாலும் சுரணை இல்லாமல் கழுதை போல் மக்கள் கேட்பார்கள்… எப்படியும் மன்னார் உறுப்பினர்கள் தன்னைத்தானே அழைக்கவேண்டும் என மாவை நினைத்தாரோ… என்னவோ…?

ஒரு அரசியல் வியாபாரியோடு உங்களையும் இக்கட்டுரையில் இணைத்து எழுதியமைக்கு #என்னை_மன்னித்துவிடுங்கள்…. உங்கள் மேன்மை பற்றி நான் அறிவேன் …. மன்னார் #கழுதைகளே….

 #மன்னார் அமுதன்

பாரி

பாரி
======== மன்னார் அமுதன்

பரம்பு மலை பாரி வந்திருந்தான்
ஓமோம் …. அவன் தான் …
முல்லைக்குத் தேர் கொடுத்தவன்
அட்டைக்குதிரையும் தேருமாய்
வாகனத்தில் வந்திருந்தான்

வஸ்திரமெங்கும் வைரமாய் ஜொலிக்க
வியர்வையில் வழிந்தோடிக் கொண்டிருந்தது
வரையப்பட்ட மீசை

அமைச்சரின் வருகைக்காய்
தார்ச்சூடு தாங்காமல்
ஒற்றைக் காலில்
ஒளவையும் வள்ளுவனும் பாரதியும்….

வயிற்றுப் பசிக்காய்
வரிசையில் நிற்கையில்
கபிலன் வந்து
காணி கேட்கிறான்
எழிலன் வந்து
ஈழம் கேட்கிறான்

ஆறுதலாய் பதில் சொல்லி
அனுப்பி வைத்த பாரியிடம்
அமைச்சர் வந்து
கை கொடுத்தார்…..
கொடுத்தான்

காசு கொடுத்தார்
வீசி எறிந்தான்

அவன் பாரி தான்….

============ மன்னார் அமுதன்