தழல்

தழல் இலக்கிய வட்டம் என்றால் என்ன?

தழல் இலக்கிய வட்டம் என்பது சமூக மாற்றத்தை விரும்பும் இலக்கிய ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட இலாப நோக்கற்ற இலக்கிய ஒன்றியமாகும். ஒவ்வொரு மாதமும் முழுமதி தினங்களில் காலை 10.00 மணிக்கு இலக்கிய ஒன்றுகூடல்களை நடாத்திவரும் தழல் இலக்கிய வட்டம், கலைஅருவி, இல.116/3, புனித சூசையப்பர் வீதி, பெட்டா, மன்னார் எனும் முகவரியில் இயங்கி வருகின்றது.

தழல் இலக்கிய வட்டத்தில் யார் கலந்து கொள்ளலாம்?

சமூக மற்றும் இலக்கிய ஆர்வமுடைய சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வயது வித்தியாசமின்றி, தொழில்நிலை, பால்நிலை வேறுபாடின்றிக் கலந்துகொண்டு விரும்பிய தலைப்பில் உரையாற்றலாம், கவிதைகள் வாசிக்கலாம், நீங்கள் எழுதிய, வாசித்த நாவல்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம். மாணவர்களை இலக்கிய ஒன்றுகூடலில் கலந்து கொள்ள, பெற்றோர்கள் ஊக்குவிப்பதன் மூலம் பயனுள்ள பல ஆழ்ந்த கருத்துக்களையும், வாசிப்பினையும் மாணவர்கள் பெறுவதற்கு பெற்றோர் உதவ முடியும்.

தழல் இலக்கிய வட்டத்தின் நோக்கம்:

மன்னார் மாவட்டத்தில் சமூகம், விஞ்ஞானம், கலை, கல்வி, இலக்கியம் தொடர்பான ஆழமான கருத்தாடல்களை உருவாக்குவதன் மூலம் சமூகப்பற்றுடைய இளந்தலைமுறைப் பேச்சாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை உருவாக்குதல் மற்றும் தேவையான பயிற்சிப் பட்டறைகள் மூலம் அவர்களின் ஆக்கங்களையும் ஆற்றல்களையும் இனங்காண்பதும், வெளிக்கொணர்வதும்.

தழல் இலக்கிய வட்டத்தின் இலக்கு:

இலக்கிய மற்றும் சமூக விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலடையச் செய்வதும், மாணவர்களையும் சமூக ஆர்வலர்களையும் மாதாந்த முழுமதி தின இலக்கிய ஒன்றுகூடல்களில் பங்குபெறச்செய்வதும்

தழல் இலக்கிய ஒன்றுகூடல் எங்கு, எப்போது நடைபெறும்?

ஒவ்வொரு மாதமும் முழுமதி தினங்களில் காலை 10.00 மணிக்கு கலைஅருவி, இல.116/3, புனித சூசையப்பர் வீதி, பெட்டா, மன்னார் எனும் முகவரியில் தழல் இலக்கிய ஒன்றுகூடல் நடைபெறும்.

இலக்கியத்தின் அவசியம் என்ன?

‘ஒரே ஒரு வாழ்க்கையோ வாழ்க்கை முறையோ நமது மனித மனத்துக்குப் போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே தான், நம் மனமானது வெவ்வேறு மனித வாழ்க்கைகளிலும் வெவ்வேறு நிகழ்வுகளிலும் தன்னைப் பொருத்தித் திருப்தியடைகிறது”, ஏதோ ஒரு வகையில் இலக்கியத்தில் ஒன்றிப் போயிருக்கும் மனிதர்கள், தமது வாழ்க்கையை செம்மையாக வாழ்வதுடன் சமூக மாற்றத்திற்கும் வழிசமைக்கிறார்கள். இன்று பல மாணவர்களும், இளந்தலைமுறையினர்களும் கூட தொலைக்காட்சியிலும், போதை வஸ்துகளிலும் தங்கள் இளமையையும், எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். அவர்களை வாசிப்பின் பக்கம் கவனத்தைச் செலுத்த பெற்றோர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆக்கங்களை தழல் ஊடாக வெளியிட முடியுமா?

நிச்சயமாக முடியும். நீங்கள் எழுதிய சிறுகதை, நாவல் மற்றும் கவிதைகளையும், இன்ன பிற ஆக்கங்களையும் thazal.info@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் எமது www.thazal.com எனும் இணையதளத்தில் வெளியிடுவோம். இதன் ஊடாக உங்கள் ஆக்கங்களும், நீங்களும் உலக வாசகர்களைச் சென்றடைவீர்கள்.மேலும் ஜீவநதி பதிப்பகமாக வெளிவந்துள்ள கவியில் உறவாடி எனும் மூன்று (மன்னார், யாழ், அனுராதபுரம்) மாவட்டக் கவிஞர்களின் கவிதைத் தொகுதியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சில புதிய மாணவ எழுத்தாளார்களை தழல் இலக்கியவட்டம் ஊடாக  உள்வாங்கியுள்ளோம்.

One thought on “தழல்

 1. வணக்கம்
  தழல் இணைய இலக்கிய இதழ் ஆசிரியர் குழு

  உங்களின் தமிழ்ப்பணியை பார்த போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
  தடைகளை -தகர்த்து
  தரணியில் தமிழ் -மணம் வீச
  தயங்காமல் உழைக்கும்-எம்
  தழல் இணைய இலக்கிய
  ஆசிரியர் -குழுவே
  உங்கள் பணிக்கு
  இருகரம் கூப்பி வணங்குகிறேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Reply