அசை போடும் இரு இதயம்

{{{{{{{ஆண்}}}}}}}
அடி நேற்று இரவு நடந்தது என்ன..
நீ ….மறந்தாயா..?? அதை நீ…
மறந்தாயா….?? காத்திருந்த
நேரமதைக் கணக்கு வைத்தாயா..??
நான்…காத்திருந்த நேரமதைக்
கணக்கு வைத்தாயா…..??(அடி நேற்று)

{{{{{{பெண்}}}}}}}
ஆஹ நேற்றிரவு நடந்ததென்ன
நீ…மறந்தாயா..??அதை நீ..
மறந்தாயா….?? பூவோடு
பூவை என்னை அனைத்துக்
கன்னத்தோடு கன்னம் வைத்து
இதழோடு இதழ் பதித்து தேன்
சுவைத்தாயே நீ…மறந்தாயா
அதை நீ மறந்தாயா…???{அடநேற்று}

{{{{{{ஆண்}}}}}}

ஓகோ….விடி விளக்கை எரிய விட்டு
மடி மேல என் தலை சாய்த்து
மெட்டி போட்ட கால்களினாலே
தட்டித் தட்டி கதை அளந்தாயே
நீ மறந்தாயா….??அதை நீ
மறந்தாயா ஓகோ
நீ மறந்தாயா..{அடிநேற்று}

{{{{{{பெண்}}}}}
ம்ம்க்கு குட்டி போட்ட பூனையாட்டம்
வெட்டிப் பேச்சைக் கொட்டிய
வண்ணம் சுத்தி சுத்தி வந்து கட்டில்
வரை அழைத்தாயே
அதை நீ..மறந்தாயா ..??அடடா நீ
மறந்தாயா..??{அட நேற்று}

{{{{{{ஆண்}}}}}

செல்லமாய்க் கதை பேசி
மெல்லமாய் உன்னை நான்
நெருங்கையிலே சின்னதாய்
என் மீசை கிள்ளியதை நீ…
மறந்தாயா…??
அடி நீ மறந்தாயா…??{அடிநேற்று}

{{{{{{பெண்}}}}}}

வாடக் காற்று குளிர் ஏற்றையிலே
வாரி அணைத்தாயே வாட்டி விடும்
உன் மூச்சுக் காற்றின் சூட்டினிலே
நான் வியர்த்து விட்டேன் நீ…
மறந்தாயா மாப்பிள்ளை நீ
மறந்தாயோ??? ஐயேடா நீ
மறந்தாயோ…????

{{{{{{ஆண் பெண்}}}}}

நேற்றிரவு நடந்ததென்ன நாம்
மறப்போமா..??அதை
நாம் மறப்போமா இன்று
வரை இன்பமதை நாம்
மறப்போமா ஆஹ ஆஹ
நாம் மறப்போமா….ஓகோ
லலலலலல….லாலாலா ஆ..♥

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்