கைம் பெண்

காற்றோடு அலைந்து
கடலோடு இணைந்து
நீர் அள்ளி வரும்
கரு முகிலே………..\

கொஞ்சம் கூறி விடு
நீ உப்பு நீரைச்
சுத்தி கரிக்கும்
இயந்திரத்தின்
பெயர் என்ன…….\

உப்பு நீரை
நீ சுமப்பதனால் தான்
கறுத்த முகத்துடன்
காட்சி தருவதோ………..\

நீ கொண்டு
வந்து கொட்டும்
நீரோ அருமை
கொட்டிய பின்னர்
நீயோ வெண்மை…..\

உனக்கு நன்றிகள்
கோடி நாடி வா மீன்டும்
என் குடிசை வாசல்
தேடி ஓடி………\

குழாய் நீர் இல்லை
குழந்தை போல் என்
முற்றத்திலே வண்ண
வண்ண மலர் செடிகள்…..\

சல சல என்று ஓடும்
அருவியை நிறப்பு
தந்தை போல் நீ…….\

அருவியைத் தாங்கி
என் செடிக்கு ஊட்டும்
பூமி அன்னை போல்….\

ஏழை என் வீட்டின்
முன்பே கொத்தோடு
மலர் மலந்திருக்கு
வீட்டுக்குள்ளே அடுப்பு
அனைந்திருக்கு……..\

பசியில் என் வயிறு
எரியும் போது வண்ண
மலரைத் தொட்டெடுத்து
கொடுத்தாள் தான் நான்
துட்டு எடுக்க முடியும்………\

காலை வேளையிலே
கண் திறந்து நான்
பார்க்கையிலே
முகம் மலர்ந்த மலர்
கண்ட பின்னர்தான்
என் முகம் மலரும்
பசி தீர்க இன்று செடி
படி அளந்து விட்டது
என்று ………..\

வாடா மல்லிகை உண்டு
மணக்கும் குண்டு
மல்லிகை உண்டு
மயக்கும் ரோஜா உண்டு
தொடடு எடுக்க உரிமை
எனக்கு உண்டு சூடிக்
கொள்ள வழி இல்லை
விழியில் ஒரு ஏக்கம்
நானோ கைம்பெண்…..\

காற்ரோடு அலைந்து
கடலோடு இணைந்து
நீர் அள்ளி வரும்
கரு முகிலே………..\

கொஞ்சம் கூறி விடு
நீ உப்பு நீரைச்
சுத்தி கிக்கும்
இயந்திரத்தின்
பெயர் என்ன…….\

உப்பு நீரை
நீ சுமப்பதனால் தான்
கறுத்த முகத்துடன்
காட்சி தருவதோ………..\

நீ கொண்டு
வந்து கொட்டும்
நீரோ அருமை
கொட்டிய பின்னர்
நீயோ வெண்மை…..\

உனக்கு நன்றிகள்
கோடி நாடி வா மீன்டும்
என் குடிசை வாசல்
தேடி ஓடி………\

குழாய் நீர் இல்லை
குழந்தை போல் என்
முற்றத்திலே வண்ண
வண்ண மலர் செடிகள்…..\

சல சல என்று ஓடும்
அருவியை நிறப்பு
தந்தை போல் நீ…….\

அருவியைத் தாங்கி
என் செடிக்கு ஊட்டும்
பூமி அன்னை போல்….\

ஏழை என் வீட்டின்
முன்பே கொத்தோடு
மலர் மலந்திருக்கு
வீட்டுக்குள்ளே அடுப்பு
அனைந்திருக்கு……..\

பசியில் என் வயிறு
எரியும் போது வண்ண
மலரைத் தொட்டெடுத்து
கொடுத்தாள் தான் நான்
துட்டு எடுக்க முடியும்………\

காலை வேளையிலே
கண் திறந்து நான்
பார்க்கையிலே
முகம் மலர்ந்த மலர்
கண்ட பின்னர்தான்
என் முகம் மலரும்
பசி தீர்க இன்று செடி
படி அளந்து விட்டது
என்று ………..\

வாடா மல்லிகை உண்டு
மணக்கும் குண்டு
மல்லிகை உண்டு
மயக்கும் ரோஜா உண்டு
தொட்டு எடுக்க உரிமை
உண்டு

சோறு போட மலரும்
துணைக் கரம் நீட்ட
நீயும் அம்மன் ஆலய
முன்பாக கொஞ்சம்
இடமும் இது போதும்
வெண் முகிலே
இந்த வெள்ளை உடை
பெண்ணுக்கு……..\

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்