நாவல் U.P – 83 உ.பி 83

எஸ்.ஏ. உதயனின் புதிய நாவல் “UP 83″
வெளியீடு : காக்கைச் சிறகினிலே

மதத்தால் இந்து ஆனாலும் , மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறீஸ்தவனும் தீரச்சைவன் ஆனாலும் ஈழத்தமிழர் ஈழவரே… அவர் எங்கிருப்பினும் நம்மவரே … சொந்தம் என்பது உறுதியடா… இது சோசலிசத்தின் சுருதியடா…. பொன்னும் பதவியும் புழுதிக்கு நிகரடா… நாம் ஈழவர்… நமது மொழி தமிழ், நம் நாடு ஈழம் “ எனும் ஈரோஸ் இயக்கத்தின் தாயக மத்திரத்தால் ஈர்க்கப்பட்டு சிங்கள பேரினவாதத்தை எதிப்பதற்கும், வர்க்கப் போராட்டத்தை மேற்கொள்ளவும் என உத்திரபிரதேசத்திற்கு போர்ப்பயிற்சிக்கு சென்று இந்தியச் சிப்பாய்களின் கைகளில் அடிபடும் போராளிகளின் கதை….

காலத்திற்கும், களத்திற்கும் பொருந்தாத கொள்கைகளை வைத்துக்கொண்டு ஆயுதங்களைக் கொடுத்து இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் இயக்கங்கள் பற்றியும், அதிலிருந்த வெளிவரத் துடிக்கும் போராளிகளின் கதையும் தான் “உத்திரப்பிரதேசம் 83”
இலங்கையின் அரசியல் நகர்வுகளையும், இயக்கங்களையும் முடக்க நினைத்த / முடக்கிய இந்தியாவின் காய்நகர்த்தல் பற்றி நாவல் பேசுகிறது…. இன்னும் விரிவாகவே பேசியிருக்கலாம்…

2009 ற்கு பின்னர் பலருடைய போர்க்கால அனுபவங்களும் நாவல்களாக வெளிவருகின்றன… அத்தகைய வகையில் இதுவும் ஒரு பதிவுசெய்யப்பட வேண்டிய கோணம் தான்…