புதினங்கள்..

வானம் வெட்கி
வசந்தம் பரப்பும் – உன்
வைகறை பார்வை
வானை வெளுக்கும்.

தீயில் தோய்ந்தும்
தீக்குச்சி சிரிக்கும் – உன்
தீ வந்து சுட்டபின்
உயிர்குச்சி மரிக்கும்..

உண்டபின் உன்னைத்தான்
ஏவறைகள் நினைக்கும் – நம்
உயிர் உண்ட காதல் மட்டும்
இங்கு எப்படி மரிக்கும்..

பூவுக்குள் சிறைவாழ
தேன் கூட வெறுக்கும் – பெண்
பூக்களுக்காய் ஏனிந்த
ஆண்கூட்டம் அலையும்?

வந்ததும் போனதும்
வாசலோடு போகும் – இந்த
பாழாய்ப்போன காதல்மட்டும்
ஏன் நெஞ்சுள் வாழும்?

குட்டி போட காசு கூட
வட்டியைத்தான் விரும்பும் – நாம்
வெட்டி எறிந்து போட்டபின்னும்
ஏன் காதல் அரும்பும்?

மழையில் நனையும் மாக்கள் கூட
முகடு தேடி ஓடும் – நம்
மனதை எரித்த பெண்ணைக்கூட
ஏன் இதயம் தேடும்?

கையை பிரிந்த பந்துகூட
சுவரில் பட்டு திரும்பும் – இந்த
பொய்கை பிரிந்த தாமரை மட்டும்
ஏன் நீரை வெறுக்கும்?

பி.அமல்ராஜ்

Comments

  1. ஒவ்வொரு வரிகளும் மிக மிக அருமை தோழனே

  2. உண்டபின் உன்னைத்தான்
    ஏவறைகள் நினைக்கும்