போரின் பின்னான இலக்கியம் எதை நோக்கி — தோழர் தேவா

இப்போதைக்குப் போர் ஓய்ந்துள்ளது. இனியும் ஒரு போர் வருமா வராதா என்பதை யாரும்திட்டவட்டமாகக் கூற முடியாது. இன்றைய நிலை ஓர் ஆசுவாசம்தான். உயிருக்குப் பயமில்லை என்றநிலை மாத்திரமே .. நாம் எதைக்கோரி நின்றோம் இ இன்றையநிலை திருப்தி அளிக்கிறதா அன்றேல் தற்போதைய நம் தேவைகள் என்ன என்பது பற்றி எல்லாம் நாம் யாரை நோக்கிப் பேசலாம். நம்மைநோக்கி நாம் பேசிக்கொள்ளலாம் அன்றேல் மற்றைய சமூகங்களுடன் பேசலாம். மற்றைய சமூகங்களுடன் பேசலாம் எனில் அச்சமூகம் நம்மிடம் என்ன பேசியுள்ளது என்ன பேசுகின்றது என்பதை அவதானிக்கின்றோமா ?

தோழர் தேவா

போருக்குப்பின்னான கட்டுமான இலக்கியம் என்ற சொல்லாடல் தற்காலங்களில் இலக்கியங்களின் காலக்குறியீடாகப் பதிவாகி வருகிறது. போரின் காலமான சில பத்தாண்டுகளுக்குமுன் நாம் என்னென்ன தேவைகளைப் பதிவு செய்தோம்இ அத்தேவைகளின் அடிப்படையில் இன்றைய நிலை என்ன என்பதனை மீள்பார்வை செய்துகொள்ளப்போகிறோமா ? கடந்துவந்த வழித்தடங்களில் சமூகமாக இ தனிமனிதாக எங்கே நின்றோம். இந்நீண்ட அழிவின் பயணத்தில் இன்றையபுள்ளியில் எங்கு நிற்கின்றோம்.இ இதுபற்றி நாம் பேசப்போகின்றோமா ?புதுஎடுப்பாக இன்று தொடங்கி பேசப்போகிறோமா ? உலகின் பல நாடுகள் நீண்ட தொடர் போர்களைக் கண்டு அதன்பின் தன் சமூக கட்டுமானங்களின் காலத்தில் எவற்றை எல்லாம் எழுதிப்பார்த்தன. என்ற தேடலை மேற்கொண்டு அதுபற்றி நம் பதிவுகளில் பேசப்போகின்றோமா ? எல்லைகளை விரிவாக்கி புதியபரிமாணங்களை அலசி நம் அனுபவங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கப்போகின்றோமா ? அல்லது கால் நடந்து தேய்த்த வழித்தடங்களில் சுலபப் பயணப்பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கப் போகின்றோமா ? என்ன நடந்தது இனி என்ன நடக்கவேண்டும் என்ற திசையை நிர்ணயிக்கப்போகின்றோமா ? நடந்தேறியவற்றின் சரி பிழைகளை மாத்திரம் விவாதித் துக்கொண்டிருக்கப் போகின்றோமா ? எதை நோக்கி நாம் நகர்த்தப்பட்டோம் வீரகோசங்கள் மார்தட்டல்கள் நம்மைச் சரியான வழியில் இட்டுச் சென்றதா அல்லது இருந்ததையும் இழந்து ஏதோ இருப்போம் என்றநிலையை அடைந்தோம் எனப்பார்க்கப்போகின்றோமா ? இவை எல்லாவற்றையும் சேர்த்து இலக்கியத்தின் புதியபோக்கை தொனியை தோற்றுவிக்கப்போகின்றோமா ? அதிகாரத்தை நோக்கிப்பேசல் நிரம்பவே சிக்கல் நிறைந்த இலக்கியப்போக்கு காலம் காலமாக அதிகாரத்தை நோக்கிப் பேசப்பட்டே வந்தது. கட்டுமான இலக்கியப் படைப்பாளிகள் அதிகாரத்தை நோக்கிப் பேசுவார்களா ? எதைஎல்லாம் அதிகாரத்தை நோக்கிப் பேசலாம். படைப்பாளிகளின் எல்லைகளை தீர்மானிப்பது யார் இன்னும் நிறையவே கேட்டுக்கொண்டே போகலாம். .

வோர் றோமான்ரிசம் றயச சழஅயவெளைஅ இதற்கான தமிழ் பதம் சரியாக எனக்குத் தெரியவில்லை ஆனால் தமிழ் சமூகத்தில் இதன் ஆதிக்கம் மிக மிக அதிகமாகவே இருந்தது.இது ஒருவகை மனநிலை எனக்குறிப்பாகச் சொல்லலாம்.. பந்தயக்குதிரைகளின் மேல் பணம் கட்டுவதுபோல் போர்க்கால நிதிவழங்கள் இ எத்தனைபேர் இறந்துபோனார்கள் என்பதெல்லாம் கிரிக்கட் பந்தயத்தில் தனது அணி எத்தனை ஓட்டங்களைப் பெற்றதென்ற ஆர்வத்துடன் கேட்டறிதல்இ தனது அணியின் இழப்புகளிற்கும் பெரிதாக மனம் வருந்துவதில்லை. ஆட்டம் சுவாரசியமாகப் போகவேண்டும் அவ்வளவுதான். பரப்புரைகளை உப்பி ஊதிப்பெரிதாக்க வீரதீரக்கற்பனைகளாக வளயவரவிடுதல் . எந்தவித நாகரீக அடிப்படைகளையும் கருத்தில் எடுக்காமல் போர்வெற்றியை அல்லது போராட்டத்தின் தன்மைகளைச் சரி என வாதிடுவது. கொடூரங்களின் வளர்ச்சியைக் கண்டிப்பதைவிட்டுப் போற்றிப்புகழ்வதும் அதுவே மதிநுட்பமென சிலாகித்துக் கொள்வது . இவைகளெல்லாம் போர்வட்டத்திற்கு வெளியே நின்றுகொண்டு நம் சமூகத்தின் வெளிப்பாடாக இருந்தது. புலம்பெயர் சமூகத்தில் இம்மனநிலை அதீதமாகவே வெளிப்பட்டது. . பரப்புரைகள் மட்டும் இவர்களைப் பலப்படுத்தியது பேசவைத்தது நம்பினார்கள் நியாயமான எதிர்வாதங்கள் எவையும் இங்கு எடுபடாமலே போனது.

இன்னும் ஒருவகையும் புலம்பெயர் சமூகத்தில் பார்க்கக்கூடியதாக இருந்தது . எழுத்துஇ பெருந்தொகையான கவிதைகள் கட்டுரைகள் சிலபல சிறுகதைகள் என ஆக்கங்கள் வெளிவந்தன. நாவல்களின் எண்ணிக்கை குறைவெனினும் அதுவும் இல்லாமலில்லை . இதில் போர்சார் போரெதிர்ப்பு என இரு அணிகள் தங்கள் எழுத்துக்களைக் கொட்டித்தீர்த்தன . இலத்திரனியல் ஊடகத்தில் இத்தகைய எழுத்துக்களும் பக்கங்களும் பரந்து விரிந்து கிளைபரப்பி இன்று ஓய்ந்து ஏதோ ஒரு சிறு அளவில் ஒப்புக்குச் சப்பாணியாக இயங்கி வருகின்றன .

போர் நடைபெற்ற இடங்கள் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் ஹஹபெடியங்கள் ’’ வந்துபோக அவர்கள் மீதான கவர்ச்சியையும் இதே வோர் றொமான்ரிசம் மனநிலை இளையத்தலைமுறையினரின் தோள்களில் ஆயுதங்களை செருகி வைத்தது. மரணத்தை வென்று நிற்றல் விதையாகிப்போதல் என்றெல்லாம் இம்மனநிலைக்கு உரம் சேர்க்கும் சொல்லாடல்கள் அதிவேகமாக உற்பத்தியாகி உலாவந்தது . வோர் றொமான்ரிசம் இருவகைத் தொழிற்பாட்டை நம்மவர்களிடையே ஆற்றியுள்ளது. போரின் நேரடி அனுபவமற்ற அல்லது நேரடி அனுபவத்தின் பின்னரும் தப்பிச் சென்று எந்த வகையிலும் போர் அணுகாத பாதுகாப்பினுள் இருந்துகொண்டு போரைக் காதலித்து அதன் செய்திகளைக் கேட்டு கிளர்ச்சியில் வாரிவழங்கிய ஒரு கூட்டம் . போரின் வலயத்தினுள் சிக்கிக்கொண்டு அழிவுகளை பார்த்த பின்னும் வார்த்தை ஜாலங்களை நம்பி தாமே போரில் இணைந்து கொண்ட இன்னுமொரு பகுதியினர். போருக்குப் பின்னான கட்டுமான இலக்கியத்தில் இப்பதிவுகள் பகுப்பாய்வுகள் என நாமே நம்மை நோக்கிப் பேசிக்கொள்வோமா ?

பீரங்கிகளின் ஆரவாரம் ஓய்ந்துவிட்டது ஆனால் அது ஏற்படுத்திய வடுக்கல் ஆளமாகவே பதிந்துகிடக்கின்றன . இன்றல்ல எப்போது அதனைத் தொட்டாலும் வலிதாங்கமுடியாது . போரில் பெற்றோரை இழந்த குழந்தைகள் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இளமையைத் தொலைத்துக்கொண்டவர்கள் சொத்துக்களை இழந்து தெருவோரம் நிற்பவர்கள் வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள் வன்புணர்வுகளை நினைவில் நின்று துடைத்தெறிய முடியாது சுமையுடன் வாழும் பெண்கள் போராடத் தூக்கிச்செல்லப்பட்ட வளரிளம் குழந்தைகள் திருமனம் செய்ய ஆண்களில்லாது இன்னும் தனிமையில் வாழும் பெண்கள் இந்த போரின் பின்னான கட்டுமான இலக்கியத்தில் எங்கு இருக்கப் போகின்றார்கள் . இவர்களின் துயரம் ஒருபுறம் இருக்க மனரீதியான பிரள்வுகள் குழப்பங்களைச் சமூகம் எப்படிப் பார்க்க வேண்டும் இதில் இலக்கியத்தின் பங்கு என்ன நம்மை நாம் நோக்கி இதுபற்றி பேசுவோமா ? விவாதிப்போம் .

போர் வித்திட்டு வளர்த்துவிட்ட வன்முறை நம்முள் எவ்வளவு ஆளமாக வேரூண்றியுள்ளது. நாம் பேசும் கட்டமைப்பு இலக்கியம் இதுபற்றிப் பேசுமா ? பேசவேண்டும் . உளவியல் ரீதியாக வன்முறை சந்ததிகளைக் கடந்து செல்லும் தன்மை கொண்டதென முந்தைய போர்ச் சமூகங்களின் அனுபவம். . இரண்டாம் பெரும்போரினூடு பயணித்த சமூகம் இதுபற்றி விரிவாகவே அலசிப்பார்த்துள்ளது. . அதேபோன்று வியட்நாம் தனது அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளது. வியட்நாம் போரில் பங்கேற்ற அமெரிக்க இராணுவத்தினர் இ ஈராக்போரின் நேசப்படைகள் இன்றளவும் ஆப்கான் போரை நடத்திக்கொண்டிருப்பவர்கள் தங்கள் பக்கத்து மனச்சிதைவுகளை பேசிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் . போரினூடு பயணித்த எம் சமூகம் அத்தாக்கங்களை சுமந்துகொண்டு இன்றுவரை அதிலிருந்துவிடுபட வழி தெரியாது நிற்கும் நிலைபற்றி எந்தபார்வையை வைக்கப்போகின்றோம் . அந்த மாந்தர்களின் மனங்களை சிறிதளவேனும் கரிசனையுடன் அனுக நாம் தயாரா விவாதிப்போம் .

காலம் சங்கிலித்தொடர் போன்றது. சில கண்ணிகளை மறந்துவிட்டு நாம் மேலே போகமுடியாது . எதைக் கட்டமைக்க விரும்புகிறோமோ அது முன்பு எப்படி இருந்ததென நம்மை நாமே கேள்விக்குள்ளாக்கிக்கொண்டால்தான் நாளை என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்க இலக்கு வைக்க முடியும் . நமது சமூதாயம் பால் பிரிவினைச் சமூதாயம் ஆண் பெண் பிரிவினையின் இறுக்கம் முன்னைவிட சிறிது தளர்ந்திருப்பினும் அது தானாக தளரவில்லை . சூழ்நிலை தகர்த்தி வைத்துள்ளது . இனி அந்நிலை என்னவாகும் தொடருமா அல்லது ஆரம்பபுள்ளியை நோக்கி நகருமா ? பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய நகர்வில் கட்டமைப்பு இலக்கியம் என்ன வகிபங்கினை எடுத்துக்கொள்ளப்போகிறது. . செய்தித்தாள்களில் பெண்கள்மீதான பாலியல் அத்துமீறல்கள் வன்புணர்ச்சி செய்திகளாகக் கசிகின்றன . நடைமுறையில் உள்ளவற்றில் எத்தனை விகிதம் இவ்வாறு செய்திகளாக வெளியே வருகின்றன. சமூகத்தில் பெண்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் அல்லது வைக்கப்பட்டிருக்கிறார்கள் . பெண்களுக்காகவே இன்னும் சில வேலைகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது . அதனை ஆண் செய்ய விரும்புவதில்லை . தூசணவார்த்தைகள் பெரும்பாலுமே பெண்களைக் குறிவைத்துத்தான் வீசப்படுகின்றன . பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் . சுயமாக இயங்கினால் பல தவறுகளைச் செய்துவிடுவார்கள் என்ற பழமைவாதக் கோட்பாடு இன்றும் உயிர்ப்புடன் கடைபிடிக்கப்பட்டுவருகிறது . பொதுப்போக்குவரத்து வாகனங்களில் முறையற்ற சீண்டல் கள் இ வார்த்தைகளால் கொச்சைப்படுத்தல் எனப்போய் காதலித்தபின் ஒழுக்கம் பெண்களிற்கான ஒன்றாக ப்பார்க்கப்படும்நிலை இன்றும் மாறவில்லை . ஒழுக்கம் யாருக்கு என்ற வரையறையில் மாற்றமில்லை . தமிழ்கலாசாரத்தில் பெண்களின் ஒழுக்கம் தான் பேசப்பட்டு வந்துள்ளதென்ற சப்பைக்கட்டு உடைத்தெறிய வேண்டிய நேரம் இது எனக்கொள்வோமா . ஒழுக்கம் உடல்சார்ந்ததா உளம்சார்ந்ததா அதாவது புணர்ச்சி மாத்திரமே ஒழுக்கத்தின் அடிப்படையா எனக்கட்டமைப்பு இலக்கியம் விவாதிக்குமா ? ஒரு சமூகம் தான் இயங்கிவந்த சூழல் மதம் என்னும் சில அடிப்படைகளைக் கொண்டு தனக்கென எழுதப்படாத விதிகளை உருவாக்கிக்கொள்கிறது . ஆனால் நடைமுறையில் பெண்களே ஒழுக்கத்தை காக்கும் கடமைக்கு உட்படுத்தப்படுகின்றார்களே அன்றி ஆண்கள் அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற மேம்போக்கு மனோநிலை . சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் ”தலைகுனிவு’’ஆண்களுக்கு இல்லை என்ற நிலை பால்நிலை சமத்துவத்தை நோக்கிய நகர்வில் தேக்கத்தைத்தான் கொண்டுவரும் .

சாதியம் பேசுதல் இ குலப்பெருமை நாம் நம்மைநோக்கிப் பேசுதலில் என்ன பேசிக்கொள்ளப்போகின்றோம் ? சாதி அடுக்கில் கீழே உள்ள சாதிகளை இழிவுபடுத்துவது கொச்சையாக சாதிப்புத்தி என விமர்சிப்பது இ தான் சார்ந்த சாதியை பெருமைபடுத்த முனைவது சாதியப்போர்வையில் இருந்து நாம் இன்னும் விடுபடா நிலமையை சாதியத்தின் தொழிற்படுநிலையை நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது . எண்பதுகளுக்கு முன்னான காலங்களில் இருந்ததைவிட தளர்வுநிலை இருப்பினும் இன்னும் திருமணங்களில் சாதியம் உரைத்து பார்க்கத்தான்படுகிறது. . செய்தித்தாள் மணமகள் ஷ மணமகன் தேவை விளம்பரங்களில் சாதி அடிப்படையிலான தேடல்கள் இன்றளவும் இடம்பெறாமலில்லை . சாதியத்தின் தோற்றம் தொழிற்பாடு என்பன சிறு சிறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டாலும் தெளிவான ஒரு ஆவணம் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது . மனிதனின் சமூகவாழ்க்கை தொடங்கியபோது அவனின் குடியிருப்புக்களில் சாதியப்படிமுறைக்கான ஆரம்பம் அங்கு தொழில்முறையில் உருவாகி சாதியக்கோட்பாடு அதைவிட்டுக் கடந்து நிலஉடமைச் சமூகம் வரை ஏன் அதன்பின்னும்கூட இன்றுவரை பல பரிமாண வளர்ச்சிகளினூடு சமூகத்தில் காத்திரமான இடத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது . இந்துமதம் சாதியம் காக்கும் மதமாக கிறிஸ்தவம் சாதியத்தைக் கைவிடாமலும் இஸ்லாமியம் சாதியம் அறவே இல்லாவிடினும் இவை இரண்டையும்விட ஓரளவு தளர்வான சாதியத்தொழிற்பாட்டை க் கொண்டுள்ளதெனக் குறிப்பிடலாம் .

மதங்களும் இலக்கியமும் இன்னும் விரிவாக பேசவேண்டியதொன்று அந்தந்த மதங்களுக்கான இலக்கியமும் அதைப்பேசும் மொழியும் உண்டு . இதைக்கடந்து பொதுச்சமூகத்திற்கான இலக்கியத்தில் மதம் எந்த இடத்தில் இருக்கிறது . மனிதனின் அறிவுத்தேடலில் மதத்தின் பங்கென்ன கட்டமைப்பு இலக்கியத்தில் மதத்தின் ஆளுமை எந்தளவில் இருக்கப்போகிறது – விவாதிப்போம் .

இன்றளவில் சாதியத்திற்கு அடுத்ததாக பிராந்தியவாதம் தன் இருப்பைச் சமூகத்தினுள் ஆள வேர் பாச்சி செளித்துக் கிடக்கிறது . பிராந்தியவாதத்தின் அடிப்படையும் சாதியம்போல்தான் . எவன் எந்த பிராந்தியத்தில் பிறக்கின்றானோ அவன் அந்த பிராந்தியத்தின் பிரதிநிதி இதுவும் சாதியம்போலவே உயர்வு தாழ்வுகளைக் கொண்டது . இடம்பெயர்வுக்குப் பின்னான சந்ததிகள் கூடத் தங்களை அப்பிராந்திய மக்களாகவே பார்க்கின்றனர் . எங்களின் அடி இந்த ஊர் என்ற அடையாளத்தை விட்டுவிட அவர்கள் தயாராக இல்லை. பிராந்தியமொழியில் பேசும் இலக்கியங்கள் இருப்பதில் தவறொன்றுமில்லை அது அப்பிராந்தியத்தின் பிரத்தியேகத் தன்மைகளை சொற்களை அறிமுகப்படுத்துவதும் அப்பிராந்தியத்தின் கதையை அல்லது ஒரு சமூகத்தின் கதையை சொல்ல முனைவது . பிராந்தியவாதம் உயர்வுத்தாழ்வு சாதியப்பிரிவின் அடிப்படை என்பதை இன்னமும் சுமந்துகொண்டு தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கிறது . இதனால் பிராந்தியவாதம் பற்றி நம்மை நோக்கி நாமே பேசிக்கொள்ள்வேண்டிய தேவை இருக்கிறது .

இலங்கையில் சிறிதும் பெரிதுமாக பல சமூகங்கள் இருக்கின்றன . இவைகளோடு நாம் எதைப் பேசப்போகின்றோம் என்ன பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ளப்போகின்றோம் . கட்டுமான இலக்கியத்தின் மிக முக்கிய நோக்கங்களுள் சமூகங்களிடையே பேசல் முதன்மையானது . இருசமூகங்களுக்கிடையான இடையறாப்பேசல் ஒரு சமூகம் மற்றையதைப் புரிந்துகொள்ளவும் தம்மிடையிலான உறவைப் பலபடுத்தவும் சிக்கல்களை எளிதாக தீர்த்துக்கொள்ளும் தன்மையைப் பெறவும் உதவும் . இந்த முனைப்பிற்கு இலக்கியம் ஒன்று மற்றொன்றை புரிந்துகொள்ளவும் ஒன்றை நோக்கி மற்றொன்று பரிவர்த்தனைகளை செய்துகொள்ளவும் வழிவகுக்கும் . இதுவரை நாங்கள் மற்றைய சமூகங்களுடன் பேசியது குறைவே . மற்றச்சமூகங்கள் எங்களுடன் பேச முனைந்தார்களா தெளிவில்லை . நம் இருப்பைச் சொல்ல வும் நமது சிந்தனையின் செழிப்பை எடுத்திச் சொல்லவும் சமூகங்களுடன் நாம் பேசியே தீர வேண்டும் . மனிதன் தன்னை எதனூடாக வெளிப்படுத்த முயல்கின்றான் இலக்கியங்களும் மென்கலைகளுமே . இவை குறிப்பிட்ட மொழிவட்டத்தினுள் அடங்காது மனிதத்துவத்தை மையமாகக் கொண்டு நகர்பவை . மற்றைய சமூகங்கள் மாத்திரமின்றி உலகுடன் பேசும் திறன் படைத்தவை . கட்டுமான இலக்கியத்தின் நோக்கு. இங்கே குறிப்பிட்ட சில புள்ளிகளை மாதிரமின்றி இன்னும் பரந்துவிரிந்ததாக அமைய வேண்டுமானால் விவாதிப்போம் .

Comments

  1. pidungi says:

    . எல்லாமே குலைந்தும் சிதைந்தும் கிடக்கிற சமூக அமைப்பினுள் இன்னதைத் தான் விவாதிப்பது என்பது எப்படி? சாதியக் கட்டமைப்பு புலியால் இல்லாமல் அழிந்து போயிற்று என்றார்கள். புலி போனவுடன் அது திரும்பி வந்தது எவ்வாறு?? ஆணும் பெண்ணும் வேறுபாடின்றி போர் வீரர்களான பூமியில் பெண் உடனடியாகவே இரண்டாம் பட்சமானதெதனால்…………………..கற்பித்த, நம்பிக்கை, கொண்டிருந்த பல விடயங்கள் கேள்விக்குறியாய் நிற்கின்றன. விவாதம் என்பது யாருக்கு யாரினால் …… இதுவரை எழுந்த இலக்கியங்களைப் படித்தவர்கள் என்னவானார்கள். தாங்கள் மேற்கோள் காட்டிய பலவிடயங்கள் பல்துறையாளார்களால் பல்வேறு தரப்பட பலவேறு மொழிகளில் கூட ஆராயப்பட்டதே அவை என்னவாயின. மறந்தவர்களுக்கு மறுபடியும் ஞபகப்படுத்த வேண்டுமென்பதுவா தங்கள் கருதுகோள்