தமிழ் சுகந்திரம்

ஒட்டறை போர்த்திய
ஒரு முளம்
கயிறு – இந்த
தமிழ் சுகந்திரம்..

அடிவிளுகையில்
குனிந்தே நின்றதால்
பையிலிருந்த
சுகந்திரம் – பத்திரமாய்
காப்பற்றப்பட்டது.

ஓடியபோதும்
ஒட்டியே வந்தது
நம்
ஓடுகாலி சுகந்திரம்..

என்னவோ,
உயரத்திலிருந்து
விழுந்ததால்
பட்ட அடி
கொஞ்சம் அதிகம்.

சூம்பிப்போன
கனவுகளோடும்,
நாறிப்போன
லட்சியத்தோடும்,
எம் – கிழிந்த
பைகள் தாங்கும்
தமிழ் சுகந்திரம்
இன்னும் மரிக்கவேயில்லை.
காவடி தோளேற
தமிழ் கர்வம்
தலைக்கேறும்
மீண்டும்…

கவிஞர் பிரான்சிஸ் அமல்ராஜ்