குற்றத்தின் உட்கூறுகள் ஓர் அறிமுகம்

சுயாதீன வெளிப்படை நோக்கில் குற்றம் எனும் செயல் சமூகத்தால் ஒழுக்க ரீதியாகவோ அல்லது அங்கீகரீக்கப்பட்ட அரசின் சட்ட ஏற்பாடுகளாலோ தடுக்கப்பட்ட செயல்களாக காட்ட முடியும். இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில் எல்லா ஒழுக்காற்று குற்றங்களும் சட்டக்குற்றங்களாகாது அதே போல் எல்லா சட்டக்குற்ங்களும் ஒழுக்காற்று குற்றங்களாகாது.உ+ ம்  மத ஆராதனைக்கு செல்லாது புறக்கணித்தல் ஒழுக்க நெறி குற்றமாகும். ஆனால் இச்செயற்பாடு சட்டப்படி தடுக்கப்பட்ட ஒன்றல்ல.உ +ம்  ஈருளுளியில் தலைக்கவசம் அணியாது செல்லல் சட்டப்படி குற்றமாயினும் ஒழுக்க நெறிகளின் படி தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.

குற்றங்கள் என குற்றச்சட்டத்தின் கீழ் வரைவிலக்கணப்படுத்தப்ட்டுள்ள செயற்பாடுகள் யாவும் ஒரு தனி மனிதனுக்கோ அல்லது குழுவிற்கோ ஏன் அரசிற்கு எதிரான செயற்பாடுகட்கு ( ACTS ) மட்டும் மேற்கோள்காட்டப்படாமல் சட்டம் குறிப்பிட்ட ஒருவனுக்கு விதித்த பணியை செய்யாமல் விடுவதை (OMMISSION ) கூட குற்றமாக மேற்கோளிடும்.

இன்றைய நவீன கால குற்றச்சட்ட வரலாற்றடிப்படைகளை பகுப்பாய்வு செய்யும் போது சமயக்கோட்பாடுகள் சட்டத்தின் தவிர்க்க முடியாத அங்கங்கள் என்பது புலப்படும். 13ம் நுாற்றாண்டில் சமய விதிகளே சட்டமாக விளங்கியதென்பதோடு அவை அன்றாட விஞ்ஞான வளர்ச்சி வேகத்தை விட பன்மடங்கு பரந்த தன்மையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் தொடர்ச்சியான கால மாற்றத்தில் இன்றைய நிலைமையை நோக்கும் போது விஞ்ஞான வேகத்தை கட்டுப்படுத்தும் நிலையில் சட்டமோ அதன் பரப்பெல்லைகளோ இல்லை என்பது கண்கூடு. உரோம பேரரசர்கள் கிறிஸ்தவ மத தலைவர்களாகவும் மத தலைவர்கள் படைத்தலைவர்களாகவும் ஆட்சி செலுத்திய காலம்.

இனி இன்றைய குற்றச்சட்ட நிலை பற்றி ஆராய்வோம்.

குற்றச்சட்டம் எப்போதும் தனி மனிதனுக்கோ குழுவிற்கோ இடையிலான சட்ட மீறுகைகளாக இருப்பினும் வாதி எப்போதும் நாட்டினுடைய அரசாகவே காணப்படும். அரசிற்காக சட்டமா அதிபர் நீதி மன்றில் பிரசன்னமாவார்  (Attorney General ). குற்றவியல் வழக்குகள் பின்வருமாறு தலைப்பிடப்படும். ( இங்கு A , B யும் குற்றவாளிகளாக சுட்டப்படின் )

A V A.G

B V A.G

தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான அத்துமீறல்கள் ஆயினும் அரசு தலையிட காரணம் இக்குற்றங்கள் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக அமையும். எவ்வாறெனில் ஒரு கொலைக்குற்றத்தில் குற்றவாளியை அரசு தண்டிக்காவிடின் ஏனையோரும் கொலை செய்ய எத்தனிப்பர். இதனால் சமூக சீரழிவு ஏற்பட்டு நாடு அழிவுப்பாகையில் செல்வது வதிர்க்க முடியாததாகிவிடும். சமூக நல அரசுகளின் மூல பணியே சமூக நீதியாகும்.

குற்றம் எனும் தோற்றப்பாட்டின் காட்சிப்படுத்தப்படும் விளைவு குற்றவாளியின் செயல் அதாவது குற்றச்செயல் (Wrongful Act ) ஆனால் சட்டம் குற்ற மூலகங்களை இரண்டாக வகுக்கின்றது.

1.குற்ற செயல் Actus Reas ( WRONGFUL ACT )

2.குற்ற மனம் Mens rea   ( GUILTY MIND )

இவை இரண்டும் ஒரு மனிதன் குற்றவாளி என தீர்ப்பளிக்க அத்தியாவசியமானவை என 1984 ஆம் ஆண்டு வழக்கான REX V FACKE எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் இங்கு ஒன்றில் இருந்து இன்னோர் தேவைப்பாட்டை வேறுபடுத்தி வெளிப்படுத்துவது சட்டவியலாளர்கட்கு விடப்பட்ட சவாலாகும்.

–அரியரெட்ணம் அர்ஜின்