உண்மைக்காதல்

ஜெர்மனியின் புகழ் பெற்ற இசையமைப்பாளரின் தாத்தா மோசஸ் மென்டல்சான் அழகுக்கும் அவருக்கும் ரொம்பத்துாரம். குள்ளமான தோற்றத்துடன் கூன் முதுகு வேறு.

 இளவயதில் ஒருநாள் அவர் ஹாம்பர்க்கில் உள்ள ஒரு வியாபாரியை சந்திக்க சென்றார். அவருக்கு பிரம்ஜே என்ற அழகு மகள். அவநம்பிக்கை ஒருதலைக் காதலில் விழுந்தார் மோசஸ். ஆனால் அவரது அவலட்சணமான தோற்றத்தால் அவள் அவரைத் திரும்பிப் பார்க்க கூட இல்லை.

293652_466899896678495_1633352048_n

மோசஸ் ஊருக்கு புறப்படும் நேரம் வந்தது. அவர் தைரியத்தை துணைக்கழைத்துக் கொண்டு, அவளிருந்த அறையின் படிக்கட்டுகளில் ஏறினார். பிரம்ஜே உடன் பேச கடைசி வாய்ப்பு

அவளக்கு தேவலோக அழகு. அதனால், மோசஸை சாதாரணமாகக் கூட பார்க்காமல் சாகடித்தாள். பெரு முயற்சிக்குப் பின் மோசஸ் கூச்சத்தோடு கேட்டார். “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதை நீ நம்புகிறாயா ?”

“ஆமாம்…” அவள் அவரைப் பார்க்காமல் சொன்னாள். “நீ என்ன நினைக்கிறே? என்றும் கேட்டாள்.

“நானும் அதை நம்புகிறேன்…” என்ற மோசஸ் தொடர்ந்தார். “உனக்கு தெரியமா சொர்க்கத்தில் ஒவ்வொரு ஆண் குழந்தை பிறக்கும் போதும் அது எதிர்காலத்தில் எந்தப் பெண்ணை மணக்கப் போகின்றது என கடவுள் அறிவிக்கின்றார். நான் பிறந்த போது எனது எதிர்கால மனைவியை தெரிவித்தார். “ஆனால், உன் மனைவிக்கு கூன்முதுகு” என்று கடவுள் சொன்னார்.

நான் உடனே சொன்னேன்,“ கூன்முதுகுடன் பெண் பிறப்பது பாவம். அந்தக் கூனலை எனக்கு கொடுங்கள். அவனை அழகாகப் பிறக்கச் செய்யுங்கள்.”

உடனே பிரம்ஜே அவரின் கண்களுக்குள் பார்த்தாள். அவளுக்குள் ஏதோ ஆழமான நினைவுகள் கிளர்ந்தன. அவள் மோசஸை நெருங்கி தனது கைகளை நீட்டினாள். அவரின் மனைவியானாள்.