முன்பெல்லாம்
இந்திரியம் தோய்ந்த
பழைய கம்பளங்கள்….

கவிஞர் பிரதீப் நவராசா
பிறகு
களவாய் வீசப்பட்ட
கருத்தடை மாத்திரைகள்….
நேற்று
பாவித்து முடிந்த
பழைய ஆணுறைகள்….
இன்று
ஒரு பச்சைக்குழந்தை….
நாளை
கர்ப்பப்பைகளையும்
யாராவது கழற்றி வீசலாம்….
இங்கே
இதே குப்பைத்தொட்டியில்..
— அகரச் சிதறல்கள் நவராசா பிரதீப்