மனிதன் மனிதனாக இல்லை

எரியும் உடலுக்குள்ளே
எழும் ஏராலமான கேள்வி
உள்ளத்தின் வலியும்
தெரியவில்லை எரிந்து
துடிக்கும் உடலின்
உயிரின் மதிப்பும்
புரியவில்லை சுத்தி
நின்று படம் பிடிக்கும்
மனித உருவில் நடமாடும்
மிருகங்களின் பார்வைக்கு….\

இதுதான் உலகம்
என்று பாடம்
புகட்டுகின்றான்
படம்பிடித்த வண்ணமே
பாதையின் நடுவினிலே
துடித்துக் கொண்டு
உயிருக்குப் போராடும்
மனிதனுக்கு……………..\

உன் உயிர் என்னடா உயிர
என் உயிர் உள்ளது இந்த
ஒளிப்பதிவில் தானடா
என்று கூறாமலே செயலில்
செய்து காட்டுகின்றான்
துடிக்கும் உயிருக்கு ஒரு
துணைக்கரம் இல்லை இங்கே
ஒளிக்கரங்கள்தான்
வெளிப்படையாக
உலாவுகின்றனர்……….\

எரியும் நெருப்பை அனைக்க
அன்பு இல்லை அனைவர்
கையிலும் இயந்திரப் பொருள்….\

இறந்து விட்டது மனித
நேயம் மனிதன் உயிரோடு
நடமாடும் பிணமாகக் காட்சி
தருகின்றான் இவ் இடத்தில்….\

பத்து மாதம் ஒரு அன்னை
சுமந்த உயிர் பத்தி எரிந்து
மடிகின்றது பதட்டம் இன்றி
படம் பிடிக்கும் பைத்தியக்கார
உலகமடா…………\

உரக்கக் கூற துணிவு இல்லை
குறுக்குப் பாதையைத் தேடும்
ஆண்கள் மத்தியிலே…….\

வார்த்தையிலே வெட்டு
ஒன்று துண்டு இரண்டாக
என்று கூறிய காலம் ஓடி
மறைந்து அருவாள் வெட்டும்
காலமடா இது…….\

தலை கால் தெரியாமல்
தறுதலையாக உலாவும்
இளைய சமுதாயத்தை
தவறு இவை என்று கூறி
தடுக்கவும் திருத்தவும்
வலியில்லாமல்
தடுமாறுகின்றது மூத்த
சமுதாயம்……….\

மனித நேயம் இல்லை
மனித அன்பு இல்லை
மனிதன் மனிதனாக இல்லை
மறுத்துப்போன இதயம்
மாற்றம் காண எதிர்க்கும் உள்ளம்
மனிதன் இருக்கான் ஆனால்
மனிதனிடம் இருக்க வேண்டிய
நட்பண்புகள் எவையும் இல்லை
இவைகள் இல்லாமல் இவன்
இருந்தும் என்ன பயன்……\

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்