மரண வாசல் அழைப்பு

இளம் வயதிலே
இரு விரல் நடுவிலே
புது வரவாக
நுழையும் சிகரெட்டாலும்
பருவ வயதிலே ஒரு
பெக் அடிப்போம்
என்று கூட்டம் போட்டு
அமர்ந்து மூச்சு முட்ட
குடிப்பதனாலும் குடி
கொள்கின்றனர்
அவனுக்குள்ளே
எத்தனையோ
கெட்டவைகள்…….\

தன்னைத் தானே
மறக்கான்
நிதானம் இழக்கான்
நினைப்பது ஒன்று
செய்வது ஒன்றாக
நடக்கான் ஊரார்
காட்டுவதோ அவன்
மேலே வெறுப்பு……….\

கண்டு கொள்ளாமல்
அவன் கடந்து வருகின்றான்
பல ஆண்டு போதையிலே….\

பாதைகள் இடம் மாறுது
பயணத்தின் போது
வாழ்கையும் தடம்
புரளுது இதில் பிழைப்பவன்
பாதி மாண்டு விடுபவன் மீதி…..\

வாழ வேண்டிய வயது
வழிப்பாதையில்
போகின்றது பலியாகி……\

நச் என்றும் இச் என்றும்
காதல் வசனம் பேசி
கைத்தொலை பேசியை
முகர்ந்த படியே வாகனத்தை
செலுத்தையிலே வலு
இழந்த கரங்கள் கொண்டு
விடுகின்றது மரண வாசலிலே……\

பாடு பட்ட பணமும்
பகட்டு வாழ்கையும்
கண் இமைக்கும் நேரத்திலே
பஞ்சாய் போணது பாதையிலே…..\

பாதை விதி முறையை
அவன் மறந்தான்
இமன் தன் கடமையை
மறக்காமல் செய்து
முடித்தான் விதி என்னும்
பெயரை மறைத்து விபத்து
என்னும் பேர் சூட்டியே அவன்
வென்றான் இவன் இறந்தான்…..\

கண்ணீர் விட்டு கதறி
அழுகின்றது உறவு
இவன் கண் திறக்க வில்லை
அதைக் காண……\

வாழ்க வாழ்க என்று
வாழ்த்திய பெற்ரோரை
செலுத்த வைத்தான்
கண்ணீர் அஞ்சலி…….\

வலி தாங்கி மடி
ஏந்திய தாய்தான் உணர்வாள்
உயிரின் வெகுமதி ஆனால்
வளர்ந்த பிள்ளையோ
பெற்ரோர் அறிவுரை
உரைக்கும் வேளையில்
கூறுவது போனால்
போகட்டும் காசி கொடுத்தா
வாங்கிய உயிர் என்று

அப்போ ஒரு வெத்துப்
பேப்பரில் அச்சு இட்ட
பணந்தான் பெரியவையா
இரத்தமும் தசையுமாக
சுமந்து தன் உயிரை பெரிதாக
நினையாது மரணத்தையும்
எதிர் நோக்கி ஒரு தாய்
ஈண்டு கொடுத்த உயிருக்கு
இல்லையா மதிப்பு…….\

மதிகெட்டவன்
விதி வரும் முனனே
தன் இறப்பை வா வா
என்று அழைக்கான்
நிதானத்தை பரிசாகக்
கொடுத்து இமை மூடும்
தறுவாயிலே ஈன்றவளின்
அறிவு உறைக்கின்றது புத்திக்கு
மரணம் மறைக்கின்றது
தடை போட்டு…….\

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்