முத்தம்மாவுக்காக

முத்தம்மா முத்தம்மா
நீ என் சொத்தம்மா.

உன் கன்னம் இரண்டுக்கும்
போட்டுத் தந்தார் பட்டாம்மா
என் அத்தம்மா…..!

நான் கொட்டப் போகின்றேன்
தினமும் முத்தமாக முத்தம்மா.

விதை வளரப்போகின்றது
வெட்கமாக முத்தம்மா.

அது காய்த்துப் பூத்துக்
குளுங்கப் போகின்றது
சொர்க்கமாக முத்தம்மா..!

நான் சொக்கப்
போகின்றேன் நின்று
உன் பக்கமாக முத்தம்மா.

பெட்டைக் கோழியும்
புறு புறுக்கும் கொண்டைச்
சேவலும் கூவி எழுப்பும்
நடு ஜாமத்திலே முத்தம்மா.

கட்டு மரம் தள்ளப் போக
வேண்டும் நானும்
எட்டி எட்டி போகலாமோ
நீயும்…….\

கிட்ட வந்து ஒட்டிக்க
வேண்டாமோ நானும்
தொட்டுக்க வேண்டாமோ.

காலா காலத்திலே கண்
உறங்கி எழுந்திட
வேண்டாமோ முத்தம்மா…\

விரித்துப் போட்டசாப்பப் பாயும்
பரீச்சைக்கு காத்திருக்கு
கரச்சல் வேண்டாம்
கரைந்து விடு என்னுள்ளே…\

எரிச்சல் வேண்டாம்
தணிஞ்சி விடு
என்னுள்ளே……..\

தஞ்சமானேன் நானும்
உன்னுள்ளே முத்தம்மா
முத்தம்மா……….\

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்

ஹைக்கூ

காட்டை வேட்டையாடினான்
மனிதன் மடிந்தது
விலங்கு..

தமிழ் தாயின் மகள்
வாயிலே நூழைந்த
வார்த்தை மம்மி…\

தரை நோக்கிய பெண்
தலை நிமிந்தாள்
தரணியாண்டாள்.

சரித்திரப் புத்தகத்தில்
விசித்திரம் படைக்கும்
சித்திரைப் பாவைகள்.

மடிப்புச் சேலையில்
மளிங்கிய
மங்கை
மடிக்கணினியிலே
மூழ்கியதோ விந்தை

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்

லிமரைக்கூ கவிதைகள்

சிவனுக்கு நெற்றிக் கண்
அடையாளம் போல் மனிதனுக்கு சிறந்து
நல்ல அறிவின் கண்

தாய் தந்தை ஆசான்
மூன்று தெய்வங்கள் சொல் கேட்டால்
நாம் அறிவில் மகான்

விலங்குக்கு வீடு காடு
இதயம் அற்ற மனிதன் கொடுத்தான்
சிறைக் கம்பிக் கூடு

கண் கவரும் இயற்கை
அதை அழித்து மனிதன் உருவாக்கி
விட்டான் ஒரு செயற்கை

அச்சம் மடம் நாணம்
பெண்ணுக்குச் சொத்தாக அந்தக் காலம்
இப்போது அதைக் காணோம்

ஏந்தியது அகப்பை அன்று
துணிந்தாள் போருக்குச் சென்றாள் பெண்
ஏந்தினாள் துப்பாக்கி இன்று

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்