கிறுக்கு ஏற்றிய முக்காட்டுக்காரியே

கன்னம் வெளுப்பான புள்ள

கார் மேகக் கூந்தல் வளர்த்த புள்ள

வெட்டி வெட்டி விழிக்கும்

விழி இரண்டையும் உற்று

நோக்க வழி இன்றி முகத்திலே

முக்காடு போட்ட புள்ள.

ஆரஞ்சு பழக் முகத்தை

ஆராய முடியாமல் திரை

போட்டு மறைத்த புள்ள.

செங் கனியாள் வாய் திறந்து

பேசயிலே செவ்விதழ் பார்க
நான் துடிக்கையிலே

அறிந்தும் அறியாதது போல்

பாசாங்கு செய்யும் புள்ள.

முற்ற விட்டுப் பறத்து குளிர்

சாதனப் பெட்டியிலே வைத்து

வெளியே எடுத்த ஆப்பிள் போல

அழகாய் உள்ள குண்டுப் புள்ள

மல்கோபா மாம்பழம் போல்

உன்னை நான் சுவைக்க வேண்டும் புள்ள

கதலிவாழை போல் வாழையடி

வாழையாக நம் காதலும் நிலைக்க
வேண்டும் புள்ள

கடந்து போகும் போது ஓரமாக
இடக்கண் சிமிட்டிய புள்ள

வலது கரம் பிடிக்க வாடி புள்ள

நாள் காட்டி காத்திருக்கு நல்ல நேரம்
குறிக்கப் புள்ள

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்

கைம் பெண்

காற்றோடு அலைந்து
கடலோடு இணைந்து
நீர் அள்ளி வரும்
கரு முகிலே………..\

கொஞ்சம் கூறி விடு
நீ உப்பு நீரைச்
சுத்தி கரிக்கும்
இயந்திரத்தின்
பெயர் என்ன…….\

உப்பு நீரை
நீ சுமப்பதனால் தான்
கறுத்த முகத்துடன்
காட்சி தருவதோ………..\

நீ கொண்டு
வந்து கொட்டும்
நீரோ அருமை
கொட்டிய பின்னர்
நீயோ வெண்மை…..\

உனக்கு நன்றிகள்
கோடி நாடி வா மீன்டும்
என் குடிசை வாசல்
தேடி ஓடி………\

குழாய் நீர் இல்லை
குழந்தை போல் என்
முற்றத்திலே வண்ண
வண்ண மலர் செடிகள்…..\

சல சல என்று ஓடும்
அருவியை நிறப்பு
தந்தை போல் நீ…….\

அருவியைத் தாங்கி
என் செடிக்கு ஊட்டும்
பூமி அன்னை போல்….\

ஏழை என் வீட்டின்
முன்பே கொத்தோடு
மலர் மலந்திருக்கு
வீட்டுக்குள்ளே அடுப்பு
அனைந்திருக்கு……..\

பசியில் என் வயிறு
எரியும் போது வண்ண
மலரைத் தொட்டெடுத்து
கொடுத்தாள் தான் நான்
துட்டு எடுக்க முடியும்………\

காலை வேளையிலே
கண் திறந்து நான்
பார்க்கையிலே
முகம் மலர்ந்த மலர்
கண்ட பின்னர்தான்
என் முகம் மலரும்
பசி தீர்க இன்று செடி
படி அளந்து விட்டது
என்று ………..\

வாடா மல்லிகை உண்டு
மணக்கும் குண்டு
மல்லிகை உண்டு
மயக்கும் ரோஜா உண்டு
தொடடு எடுக்க உரிமை
எனக்கு உண்டு சூடிக்
கொள்ள வழி இல்லை
விழியில் ஒரு ஏக்கம்
நானோ கைம்பெண்…..\

காற்ரோடு அலைந்து
கடலோடு இணைந்து
நீர் அள்ளி வரும்
கரு முகிலே………..\

கொஞ்சம் கூறி விடு
நீ உப்பு நீரைச்
சுத்தி கிக்கும்
இயந்திரத்தின்
பெயர் என்ன…….\

உப்பு நீரை
நீ சுமப்பதனால் தான்
கறுத்த முகத்துடன்
காட்சி தருவதோ………..\

நீ கொண்டு
வந்து கொட்டும்
நீரோ அருமை
கொட்டிய பின்னர்
நீயோ வெண்மை…..\

உனக்கு நன்றிகள்
கோடி நாடி வா மீன்டும்
என் குடிசை வாசல்
தேடி ஓடி………\

குழாய் நீர் இல்லை
குழந்தை போல் என்
முற்றத்திலே வண்ண
வண்ண மலர் செடிகள்…..\

சல சல என்று ஓடும்
அருவியை நிறப்பு
தந்தை போல் நீ…….\

அருவியைத் தாங்கி
என் செடிக்கு ஊட்டும்
பூமி அன்னை போல்….\

ஏழை என் வீட்டின்
முன்பே கொத்தோடு
மலர் மலந்திருக்கு
வீட்டுக்குள்ளே அடுப்பு
அனைந்திருக்கு……..\

பசியில் என் வயிறு
எரியும் போது வண்ண
மலரைத் தொட்டெடுத்து
கொடுத்தாள் தான் நான்
துட்டு எடுக்க முடியும்………\

காலை வேளையிலே
கண் திறந்து நான்
பார்க்கையிலே
முகம் மலர்ந்த மலர்
கண்ட பின்னர்தான்
என் முகம் மலரும்
பசி தீர்க இன்று செடி
படி அளந்து விட்டது
என்று ………..\

வாடா மல்லிகை உண்டு
மணக்கும் குண்டு
மல்லிகை உண்டு
மயக்கும் ரோஜா உண்டு
தொட்டு எடுக்க உரிமை
உண்டு

சோறு போட மலரும்
துணைக் கரம் நீட்ட
நீயும் அம்மன் ஆலய
முன்பாக கொஞ்சம்
இடமும் இது போதும்
வெண் முகிலே
இந்த வெள்ளை உடை
பெண்ணுக்கு……..\

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்

மலரும் வண்டும்

எங்க வீட்டு
சிறு மலர்
இதழ் விரித்த
வண்ண மலர்…\

அதை நோட்டமிட்டு
நோட்டமிட்டு வட்டம்
போட்டது வண்டு….\

அதைக் கண்ணுற்ற
என் கண்மணிக்குப்
சிறந்த ஒரு காட்சி
என்னுள்ளே பிறந்தது
இன்ப வீழ்ச்சி……….\

இதற்குச் சாட்சி
அருகில் அமர்ந்து
இருந்த ஒரு பூச்சி…..\

பேச்சு மொழி
அங்கே இல்லை
வண்டுக்கும்
மலருக்கும்
இச்சு இச்சு
உறவாடுகின்றது
டச்சு டச்சு…….\

வைத்தவனைப்
போலே மொய்த்து
வாரான் வண்டன்
மலருக்கு மலர்…..\

மொய் வைக்காமலே
உண்டு வாரான்
கள்ளத்தனமாய்
ரீங்கார இசையோடு.
மயக்கி வாறான்
வண்ண மலரை…….\

மலரைத் தொட்டு
எடுத்து
மாலையாக்க
வேண்டும்
என்னவென்று
எடுப்பேன் நானும்……\

இன்னும் இணை பிரியாத
ஜோடி போல் வண்டும்
மலரும் கொத்தோடு
இருக்கையிலே………..\

ஊர்ந்து ஊர்ந்து
சுவைக்கின்றது
வண்டு மயங்கிய
படியே மலரும்
தாங்கியே
நிற்கின்றதே……\

விரட்டி விட மனம்
இல்லை எட்டி நில்
என்று கட்டளை
இடுகின்றது என்னிடம்
என் உள்ளம்……..\

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்