தழல் இலக்கியக் கருத்தாடல் – கார்த்திகை


தழல் இலக்கிய வட்டம் நடத்தும்

கார்த்திகை மாத முழுமதி தின இலக்கியக் கருத்தாடல்


காலம்: 27-11-2012 (முழுமதிதினம்)
நேரம் : காலை 10.00 மணி
இடம் : கலைஅருவி,
116/3, புனித சூசையப்பர் வீதி
பெட்டா, மன்னார்.


தலைமை

திரு. அ.அந்தோணிமுத்து (மூத்த கவிஞர் மன்னார் அமுது)
ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்

நிகழ்வுகள்

01. ஜெ. மரின் லிஷாயினி – உரை: “இளைஞனும் தொலைபேசியும்”
02. ஜெ.கெஷ்ரா லிமா – கவிதை: அன்னை
03. திரு.அ.அந்தோணிமுத்து – சிறுவர் இலக்கியமும் குழந்தைகள் உளவியலும்
03. ஆண்டுக் கணக்கறிக்கை சமர்ப்பித்தல்
04. அறிவோம் பகிர்வோம் – கருத்தாடல்

குறிப்புகள்:

1. 27-28-29/10/2012 ஆகிய தினங்களில் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து தழல் இலக்கியவட்டம் நடத்திய புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டும், உதவிகளை நல்கியும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தழல் இலக்கிய வட்டத்தினரின் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம்.

2. தழல் இலக்கிய வட்டத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட (t-shirt) மேலாடைகள் விற்பனைக்குள்ளன. சிறப்பு விலை ரூ.750.00 .மேலாடைகளை கொள்வனவு செய்தும் இலக்கிய செயற்பாட்டிற்கு
ஆதரவினை வழங்கலாம்.

3. இலக்கியவட்டத்தின் அங்கத்தவரான செல்வி.மொஹமட் சுஜானா அவர்கள் பாலபண்டிதர் பட்டம் பெற்றுள்ளார். அதனையொட்டி சிறு விருந்துபசார நிகழ்வும் இடம்பெறும்.

தங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

“கவியில் உறவாடி” வெளியீட்டு விழா – ஒரு பார்வையும் பகிர்வும்

Quote


Photo Editing: மன்னார் அமுதன்

மன்னார் எழுத்தாளர் பேரவை மற்றும் தழல் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், 10.11.2011அன்று ‘கலை அருவி’ ஒன்றுகூடல் மண்டபத்தில் காலை 10.15 இற்கு ஆரம்பமான “கவியில் உறவாடி” (கவிதைத் தொகுப்பு – ஜீவநதி வெளியீடு) வெளியீட்டு விழாவிற்கு மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவரும் மன்னார் எழுத்தாளர் பேரவையின் போசகருமான அருட்திரு.தமி்ழ்நேசன் அடிகள் தலைமைதாங்கினார். பிரதம அதிதியாக எம்மால் அழைக்கப்பட்டிருந்த வைத்தியக் கலாநிதி திரு.எஸ்.லோகநாதன் அவர்கள் (யாழ்ப்பானத்திலுள்ள) தனது மைத்துணனின் திடீர் மரணச்செய்தியைக் கேள்வியுற்ற பின்னரும் அங்கு புறப்படுவதற்கு முன் எமது விழாவினைச் சிறப்பிக்கும் உயரிய எண்ணத்தோடு விழா ஆரம்பமாவதற்கு முன்னரே நிகழ்விடத்திற்குப் பிரசன்னமாகியிருந்தமை எமக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. எனினும் எமக்கு அது தர்ம சங்கடமான நிலையைத் தோற்றுவிக்கவே, அவரை முற்கூட்டி அனுப்பிவைக்கின்ற எண்ணத்தோடு நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்களை மேற்கொள்வதெனத் தீர்மானித்தோம்.

Continue reading

இம்முறை இலக்கிய தீபாவளி..

முதலில் எனது சகல நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள். இம்முறை தீபாவளி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அமைந்திருக்கும் என நம்புகிறேன். அதிலும் ஒவ்வொரு பட்டாசு வெடியிலும் எங்கள் பிள்ளைகளின் முகத்தில் தவழ்ந்த புன்னகையை ரசித்ததோடு, பட்டினியால் வாடும் சிறு பிள்ளைகளின் கண்ணீரையும் ஒருமுறை சிந்தித்திருந்தால் இதை விட சிறப்பான தீபாவளி நமக்கு என்றும் இல்லை என உணர்ந்திருக்க முடியும். சரி, விடயத்திற்கு வருகிறேன். இம்முறை தீபாவளி எனக்கு ரசிக்கக்கூடியதாய் இருந்தது எதோ உண்மைதான்.. காரணம்??

26-10-2011 அன்று முதலாவது கருத்தாடலுடன் ஆரம்பிக்கப்பட்ட தழல்

26-10-2011 அன்று முதலாவது கருத்தாடலுடன் ஆரம்பிக்கப்பட்ட தழல் இலக்கிய வட்டம்

தழல் இலக்கிய வட்டமும் மன்னார் எழுத்தாளர் பேரவையும் இணைந்து நடத்திய “போருக்கு பின்னதான ஆக்க இலக்கிய போக்கு” என்னும் தலைப்பில் அமைந்த இலக்கிய கருத்தாடலில் பங்கேற்று வந்ததில் பெரும் மகிழ்ச்சி. மன்னாரின் சகல இலக்கிய படைப்பாளிகளின் நீண்ட நாள் கனவுகள் இன்று காலை பத்து மணிக்கு பெருமூச்சு விட்டுக்கொண்டன. இதற்கு முதலில் இதை முன்னின்று ஒழுங்கமைத்த நண்பர் மன்னார் அமுதனிற்கு பெரும் நன்றிகள். அத்தோடு தலைமை தாங்கியது தொடக்கம் எமக்கு தேவையான சகல வசதிகளையும் செய்துதந்த அருட்பணி.தமிழ் நேசன் அடிகளாரையும் மறந்து விட முடியாது..

மேற்படி தலைப்பில் அருமையான சொற்பொழிவை நிகழ்த்திய தோழர் தேவா அவர்கள் இன்னும் எனது கண்களை விட்டு அகலவில்லை. Continue reading