மறுபக்கம் – சிறுகதை

சந்துனி…. சந்துனி….. என்று அழைத்தாள். அறையின் முன்னுள்ள நடைபாதையில் தனக்குள்ளாகக் கதைத்து விளையாடிக் கொண்டிருந்த சந்துனி “என்னம்மா…” என்று வாசலை எட்டிப்பார்த்தபடியே கேட்டாள். “இன்னைக்கு நேரத்தோடயே வாறன்னு போனாரு.. இன்னுங் காணல, அப்பா வாறாரான்னு கீழ போயி ஒருக்காப் பாத்துட்டு வா”

“சரிம்மா…” என்றபடியே படிக்கட்டுக்களை நோக்கி ஓடினாள் மகள்.

…………………………………………………..

பளபளவென மின்னிக் கொண்டிருந்த கைப்பிடியைப் பிடித்தவாறு உயர்ந்தரக மாபிள்கள் பதிக்கப்பட்டிருந்த படிக்கட்டுக்களில் இறங்கி வந்துகொண்டிருந்த ஐந்து வயது மகளைப் பார்த்து “கவனம்மா….. பாத்து இறங்குங்க… வழுக்கிடப் போகுது….” என்றாள் மஞ்சரி தானியங்கி சலவை இயந்திரத்தில் சோப்புத் தூளைக் கொட்டியபடி. மஞ்சரியின் சத்தத்தைக் கேட்டு, கைத்தொலைபேசியில் பெயர்ப்பட்டியலில் யாரையோ தேடிக்கொண்டிருந்த ராஜசேகர் நிமிர்ந்து மகளைப் பார்த்தார்.

 

“அப்பா வாங்க, டான்ஸ் கிளாஸ் போகணும்..” Continue reading

பழைய பாட்டு … சிறுகதை

கதை: துரையூரான் சிவானந்தன்

ஏந்தான் இப்பிடித் தல சுத்துதோ தெரியல. அண்ணாந்தாப் போதும் பின்னுக்க தள்ளுது. சூரியன் வேற கண்ணுக்குள்ள அடிக்குது…. மூணு கம்புகள ஒன்னுக்கடுத்ததா மத்ததுன்னு வச்சுக் கட்டுன கம்பத் தூக்கி காமட்டையில வைக்கிறதுக்குள்ள கையொலைஞ்சி போயிருது….மட்டையில கத்தி பட்டதுமே கொட்டும்பாருங்க……. தூசி.. கண்ணுக்குள்ள விழுந்துச்சோ… அவ்வளவுதான் அன்னயப்பாடு….அண்ணாந்து பார்க்காம மட்டய இழுக்கேலாது… தெனந்தெனம் இதே அக்கப்போருதான். எப்பிடியும் ரெண்டு கட்டு மட்டயோட போயிரனும்… அப்பத்தான் ஐநூறு தேறும்.

இப்பப் பரவால்ல, முன்னமெல்லாம் அப்பா சொல்லுவாரு.. “நாங்க மட்டையை வெட்டிக்கிட்டுப் போய் காதர் காக்கா கடைக்கு முன்னால உள்ள கட்டையில சாத்திவைச்சிட்டு, ஒரு பிளேன்டியக் குடிச்சிட்டு, முதலாளின்னு…. தலயச் சொறிஞ்சா மூணுருவாக் காசத் தருவாரு… அதுவும் சில சமயங்கள்லதான்…. மத்தப்படி அரிசி சாமான் வாங்கித்தான் காசக் கழிக்கனும்” அப்பல்லாம் சாமாங்க வெலயும் கொறச்சலாத்தான் இருந்திருக்கும்… Continue reading