போர் இறுதி நாட்களின் அனுபவங்கள் நூலாக வெளியீடு

யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. அன்ரன் ஸ்டீபன் அடிகளாரின் நூலின் இறுதி நாட்களில் மக்களோடு இருந்து பெற்ற போர்க்கால துன்ப அனுபவங்களை உயிர்ப்பதிவு என்ற பெயரில் நூலாக வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா கடந்த 16.06.2014 அன்று மாலை 4.00 மணிக்கு யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ் திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு யாழ் குருக்கள் மன்ற தலைவர் அருட்திரு. இ. ஸ்ரலின் அடிகளார் தலைமை தாங்கினார். யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. யஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் போர் இலக்கியங்கள் தொடர்பான சிறப்புரையை மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மைய இயக்குனரும், மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவரும், மன்னாப்பத்திரிகையின் ஆசிரியருமான அருட்பணி. தமிழ் நேசன் அடிகளார் வழங்கினார்.

யாழ் மறைமாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் அருட்திரு. மங்களராஜா அடிகளார் ஆசியுரை வழங்கினார். இந்நூலுக்கான நயப்புரையை அருட்திரு. இ. ரவிச்சந்திரன் அடிகளார் வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அருட்பணி. தமிழ் நேசன் அடிகளார் “ஈழத்து போர் இலக்கியங்களின் வரிசையில் உயிர்ப்பதிவுகள்” என்ற இந்த நூல் இடம்பெறும் என்றும் போரின் இறுதிநாட்களின் கண்கண்ட சாட்சியான நூலாசிரியரின் அனுபவப்பதிவுகள் உலகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பும் என்றும் உண்மைக்கு சாட்சிபகர வந்த இயேசுவின் பணியாளன் என்ற வகையில் அருட்திரு. ஸ்ரிபன் அடிகளாரும் இந்நூலின் பதிவுகள் ஊடாக உண்மைக்கு சாட்சியம் பகர்ந்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

மன்னார் தமிழ்ச்சங்கம் வெளியிடும் “இரு நூல்கள்”

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் செல்வன். வை.கஜேந்திரனின் “ துடிக்கும் விழிகள்” – கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா

காலம்: 27/04/2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மதியம் 2.30 மணி
இடம்: நகர மண்டபம் மன்னார்

அனைவரும் வருக

———————————-

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் செல்வன். ரஜீராஜின் “ நெஞ்சு விடும் தூது” – கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா


காலம்: 27/04/2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி
இடம்: மன்/ சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி பிரதானமண்டபம்

அனைவரும் வருக

மன்னார் தழல் இலக்கியவட்டத்தின் ஏற்பாட்டில் “மகளிர் தினம்”

மன்னார் தழல் இலக்கிய வட்ட இலக்கியத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த மகளிர்தின நிகழ்வானது இன்று ( 16/03/2014) காலை 10 மணிக்கு கலைஅருவி மண்டபத்தில் இடம்பெற்றது. எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வருகை நேர விரிவுரையாளர் பண்டிதர்.ம.ந.கடம்பேஸ்வரன், செல்வி.கோதை பரதலோஜினி (தமிழ் ஆசிரியர் – மன்/உயிலங்குளம் றோ.க.த.க.பாடசாலை), திருமதி.வதனி (கலாச்சார அலுவலர்), செல்வி ஜெயசீலி (இசை ஆசிரியர் – மன்/ புனித சவேரியார் பெண்கள் கல்லூரி), ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் திரு. தேவா மகளிர் தினம் பற்றிய அறிமுக உரையை ஆற்றினார்.

கவிஞர் மயூரனின் தலைமையில் மகளிர்தினக் கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் மன்/அல் அஸ்கர் தேசிய பாடசாலையின் மாணவிகளான ஏ.சஸ்லா, பி.எப்.சிபா, டி.தர்சிகா, எம்.ஜே.ஜஸ்ரின், எம்.எஸ்.எப்.சஹ்லா, எச்.எப்.ஹஸ்னா ஆகியோர் பங்குபற்றி சிறப்பாக கவிதைகளை வாசித்தனர். இசை ஆசிரியை சி.பி.ஜெயசீலியின் மாணவிகளான வீ.அனித்தா, ரா.பிரசாந்தினி, ம.பிரவீனா, எஸ்.ஜீன் ஏஞ்சலின், ஆர்.கே.மக்கலின் ஜூலியட், ஏ.இம்மானிவேலி, டி.தமிழினி ஆகியோர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கீர்த்தனையையும், பாரதியார் பாடல், மத்திம காலக் கீர்த்தனை, சஞ்சாரி கீதம் ஆகியவற்றை சிறப்பாக இசைத்தனர்.

மன்னார் பரத கலாலயா நாட்டியப் பள்ளி மாணவர்களான மிதுசா, கவிஷாலினி, நிதுசன், நிசி, அபிலாஷ், சுஜிபன் ஆகியோர் பங்குபற்றிய ஒயிலாட்டம் மிகச்சிறந்த சமுதாயக் கருத்துக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மன்/புனித சவேரியார் கல்லூரி மாணவி செல்வி.நிசா “ மகளிருக்கு எதிரான வன்முறைகள்” பற்றிய உரையையும், தலையுரையை எழுத்தாளர் வெற்றிச் செல்வியும் ஆற்றினர்.

பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரனின் “இலக்கண மரபு” எனும் ஆய்வுநூல் பற்றிய சிறப்புப்பார்வையை ஆசிரியை.கோதை பரதலோஜினி ஆற்றினார். புதிய தளம் இலக்கிய சஞ்சிகை பற்றிய அறிமுக உரையை திரு. காந்தன் ஆற்றினார். மன்னார் அமுதனும், வெற்றிச்செல்வியும்  நெறிப்படுத்திய இந்நிகழ்வில் www.newmannar.com செய்தித்தளத்தின் அனுசரனையுடன் மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்விற்கான தேநீர் உபசரனையை திருமதி.சுஜானா அப்துல்ரகுமான் அவர்கள் வழங்கி உதவினார்.

மேலதிக படங்கள் பார்க்க, பதிவிறக்கம் செய்ய : முகப்புத்தகம்