ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்

கைகளில் கசியும் ஒரு “சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்”

                                                   – மன்னூரான் ஷிஹார்

 

ஈழத்தின் இன்றைய பெயர்சொல்லத்தக்க தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் பெரும் பிரயத்தனத்தினால் நூலுருப் பெற்றிருக்கும் “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” எனும் சிறுகதைத் தொகுப்பானது அரபுலகின் நாம் அறிந்திராத பல சங்கதிகளை ஏந்தியதாக வெளிவந்திருக்கின்றது.

‘ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது தமிழ்ப் பழமொழி.அஷ்ரப் சிஹாப்தீன் தமிழர்தம் வாழ்வியலோடும் பாரம்பரியத்தோடும் தொடர்புடைய ஒரு தானியமாக அரிசிச்சோறு இருப்பதால்தான் போலும் இந்தப் பழமொழியில் அது உதாரணமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதையே நான் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இந்தச் சிறுகதைத் தொகுப்போடு பிரதியிட்டுப் பார்க்கின்றேன்.

அரபுலகைப் பொறுத்தமட்டில் அதனுடைய அன்றாட வாழ்வியல், வரலாறு, பாரம்பரியம் என்பவற்றோடு ஐக்கியமான ஒரு உணவாகக் கருதப்படுவதும், அரபுதேசம் என்றதுமே நம் எல்லோருக்குமே சட்டென நினைவுக்கு வருவதும் அங்குள்ள பேரீச்சம்பழங்களே. அதில் பலவகையுண்டு.

Continue reading

மூன்றாம் ஒருவன்

நீ
நீயாகவே இருந்துவிடு.
நானுங்கூட
நானாகவே இருந்துவிடுகிறேன்.
நீ “நான்“ ஆக முயல்வதும்…..
நான் ”நீ“ ஆக நினைப்பதும்…..
வேண்டாம் இந்த
வேண்டாத வேலையும்
விபரீத விண்ணப்பமும்.

பசுவாய் இருந்துகொண்டே
கதறுவதைக் கைவிட்டு
கர்ச்சிப்பவன் நீ.
எனக்கோ,
சிங்கவேஷம் போட்டாலும்
சிரிக்கமட்டுமே முடிகிறது.

தண்ணீர் வழியாக
தழலையே கடத்துகிறவன்
நீ.
ஆனால் நானோ,
வெந்நீர் வைப்பதைக்கூட
வீரச்செயலாய் எண்ணி
வியந்து பேசுகிறவன். Continue reading