பேய்களின் தாண்டவம்….

இப்பொழுதெல்லாம்
எனது தெருக்களில்
பேய்களினதும் குள்ள நரிகளினதும்
கூடல்கள்
வெகு சாதாரணமாகிவிட்டன
அதிகாலை வேளையிலும்
மாலை மங்கலிலும் கூட – அவை
சுதந்திரமாய் உலா வருகின்றன

பேய்களின் இருப்பிடம்
காடென்பது மாறி – என்
கிராமங்களாகிவிட்டன
ஒளிந்து நெளிந்து
வளைந்து திரிந்த அவற்றிற்கு
முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாய்
மகிழ்கின்றன

நான் ஒருபொழுதும்
நினைத்துப்பார்த்ததில்லை
எனது தெருக்களில்
பேய்கள் உலாவுமென்பதை
இரவுகளில் மட்டுமே
பேய்கள் வெளிக்கிளம்பும் – என்ற
கற்பனையும் பேய்ப்பயமும்
எனக்குள் சிதைந்துபோய்
வெகு நாட்களாகிற்று

அவற்றின்
அடைப்புக்களையும் அடைத்தல்களையும்
காணநேர்கையில் சீறிப்பாய்கிறது குருதி
தாளாத சீற்றத்தில்
என்னைத்தாண்டி செல்கையில்
சிரிக்க முயல்கின்ற அவற்றைப்பார்த்து
முறைத்துச் செல்கின்றேன் நான்

அதர்வ வேதம் பாடும் உங்களுக்கு
எனது தெருக்களிலும்
எனது தோட்டங்களிலும்
இங்கென்ன வேலை என்று
கேட்கத் தோன்றுகையில்
தொலைந்து போகின்றது
எனது சித்தாந்தம்

கைது செய்யப்படுதலும் கடத்தப்படுதலும்
காலவரையின்றி
கட்டுக்கோப்பாய் நிகழும்
என்ற அச்சத்தில்
மடக்க நினைக்கிறாள் அன்னை

பேய்களின் பட்டியலில்
என் பெயர் இருப்பதாயும்
கூடாத சொப்பனத்தில்
தொலைந்து நான் போனதாயும்
சொப்பனத்தின் கதை சொல்லிப்
புலம்புகிறாள் தினமும்

என் தெருக்களில் தென்றல்
வாங்குவதற்கும்
சாளரத்தின் வழியே
தலை நீட்டுவதற்கும் கூட
திட்டித்திட்டி தடை
விதிக்கிறாள் அன்னை
இந்தப் பொல்லாத பேய்களின்
தாண்டவத்திற்கு அஞ்சியவளாக..

வினோதினி

தழல் வாசகர் வட்டம் – புரட்டாதி 2016

தழல் வாசகர் வட்டம் – புரட்டாசி 2016

இடம்: மன்னார் பொது நூலகம்
நாள் : 08/ஒக்டோபர்/2016 சனிக்கிழமை
நேரம்: காலை 10.00 மணிக்கு

கலந்துகொள்ளும் வாசகர்கள் தங்கள் கவிதையை வாசிக்க நேரம் ஒதுக்கப்படும்….. அதே போல் நகைச்சுவைத் துணுக்குகள் சொல்லவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது….

அனைவரும் வருக…

ஏங்குகின்றேன் தனிமையில்

யாரிடமும் தேடி
நெருங்காத
என இதயம்
உன்னைத் தினமும்
நாடியே நெருங்கி
வருகின்ற
போதெல்லாம்
நீ நொறுக்கியே
விடுகின்றாய்…………♥

மென்மையாகப் பேசி
என்னைக் கொள்ளை
கொண்டாய் நீ
இப்போது
கள்வன் இல்லை
என்று தள்ளியே
நிற்கின்றாய்…….♥

அள்ளிக்
கொடுப்பாய்
நீ அன்பை
என்று நான்
பிள்ளை போல்
பழகி வந்தேன்
பள்ளத்தில்
தள்ளி விட்டு
மெல்லமாய்
நகர்ந்து விட்டாய்…..♥

நீ விலகி நின்றாலும்
மறக்காதே
வெறுக்காதே
பொறுக்காது என
இதயம் அன்பே.♥

நீ அழகன்
இல்லை என்று
தாழ்வு மனப்பாங்கு
கொண்டு ஓடி
விட்டாயா இல்லை
என்னை விலக்கியே
விட நினைத்து
மௌனம் ஆனாயா….♥

உள்ளத்தின்
அளவு வெறுத்தாயா
இல்லை வெறுப்பு
என்னும் நாடகத்தை
ஊமையாக
அரங்கேற்றுகிறாயா……♥

உன்னை எனக்கு
ரெம்ப ரெம்ப
பிடிக்கும் உன்
இதழ் அசைவில்
வரும் ஓசையை
அதிகம் பிடிக்கும்…..♥

உன் பொய்க்
கோபம் பிடிக்கும்
நீ வெறுப்பது போல்
நடிப்பது பிடிக்கும்
உன் காந்தக்
கண்களைப்
பிடிக்கும்
மென்மையான
புன்னகையும்
பிடிக்குமடா….♥

முதல் முதலாக
என்னைக்
கைதியாக்கியது
உன் அபாரக் கவி
வரிகள் உன்
கவிதை தான்
என் உயிர்
காதலனடா……♥

பதவி பட்டம்
பேராசை
புகழ்ச்சி
இவைகளை
உமக்குப் பிடிக்காது
உன் தாடி மட்டும்
எனக்குப் பிடிக்காது……♥

அன்புக்கு மட்டும்
நான் ஏழையடா
அதை உன்னிடம்
தாணமாகக்
கேட்பது நியாமா
அனியாயமா
அறியாத
பதுமையானேனடா…♥

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்