ஏங்குகின்றேன் தனிமையில்

யாரிடமும் தேடி
நெருங்காத
என இதயம்
உன்னைத் தினமும்
நாடியே நெருங்கி
வருகின்ற
போதெல்லாம்
நீ நொறுக்கியே
விடுகின்றாய்…………♥

மென்மையாகப் பேசி
என்னைக் கொள்ளை
கொண்டாய் நீ
இப்போது
கள்வன் இல்லை
என்று தள்ளியே
நிற்கின்றாய்…….♥

அள்ளிக்
கொடுப்பாய்
நீ அன்பை
என்று நான்
பிள்ளை போல்
பழகி வந்தேன்
பள்ளத்தில்
தள்ளி விட்டு
மெல்லமாய்
நகர்ந்து விட்டாய்…..♥

நீ விலகி நின்றாலும்
மறக்காதே
வெறுக்காதே
பொறுக்காது என
இதயம் அன்பே.♥

நீ அழகன்
இல்லை என்று
தாழ்வு மனப்பாங்கு
கொண்டு ஓடி
விட்டாயா இல்லை
என்னை விலக்கியே
விட நினைத்து
மௌனம் ஆனாயா….♥

உள்ளத்தின்
அளவு வெறுத்தாயா
இல்லை வெறுப்பு
என்னும் நாடகத்தை
ஊமையாக
அரங்கேற்றுகிறாயா……♥

உன்னை எனக்கு
ரெம்ப ரெம்ப
பிடிக்கும் உன்
இதழ் அசைவில்
வரும் ஓசையை
அதிகம் பிடிக்கும்…..♥

உன் பொய்க்
கோபம் பிடிக்கும்
நீ வெறுப்பது போல்
நடிப்பது பிடிக்கும்
உன் காந்தக்
கண்களைப்
பிடிக்கும்
மென்மையான
புன்னகையும்
பிடிக்குமடா….♥

முதல் முதலாக
என்னைக்
கைதியாக்கியது
உன் அபாரக் கவி
வரிகள் உன்
கவிதை தான்
என் உயிர்
காதலனடா……♥

பதவி பட்டம்
பேராசை
புகழ்ச்சி
இவைகளை
உமக்குப் பிடிக்காது
உன் தாடி மட்டும்
எனக்குப் பிடிக்காது……♥

அன்புக்கு மட்டும்
நான் ஏழையடா
அதை உன்னிடம்
தாணமாகக்
கேட்பது நியாமா
அனியாயமா
அறியாத
பதுமையானேனடா…♥

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்

ஆட்சியின் எழுச்சியைப்பாருங்கள்

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்ந்து கொண்டு
இருக்கும்
முதல்வர்களே……..\

நீங்கள் படித்துக்கொடுத்த
பாடம் வீதியில்
படுத்திருப்பதைப்
பாருங்களே…………….\

படிக்கும் வயதில்
குடிக்கான்
பாடத்தை நினைக்கும்
வயதிலே தன்னையே
மறக்கான் போதையில்
மிதக்கான்……………..\

குடிமக்கள்
என் குடிமக்கள்
என்று உங்கள்
முழக்கம் விளக்கம்
கேட்டால் ஓட்டம்
நாளுக்கு நாள்
அதிகரிக்கின்றது
குடிகாரக் கூட்டம்……..\

வீதிக்கு ஒரு கோவில்
அங்கே எத்தனையோ
போலிப் பூசாரி……….\

தெருவுக்கு ஒரு
ஓரம் விபச்சார
விடுதி இங்கும்
நடக்கின்றது
மழலைகள்
வதைப்பு…….\

திரும்பும் திசை
எல்லாம் மதுக் கடை
திசை மாறிப்
போகின்றனர்
இளைய சமுதாயம்
சாக்கடையாய்……….\

தாய் நாடு தமிழ் நாடு
தழ்ழாடுது இதைக்
கண்டும் காணாமல்
அரசியல் கொண்டாடுது…..\

ஐயா ஆட்சியில்
ஏறியது விலை
அம்மா ஆட்சியில்
இறங்கியது
குஷியில் குடிகாரன்…..\

குலம் வாழ குணம் வாழ
குடிமக்கள் நலமாக வாழ
நாடு போற்ற உலகம்
பார்க்க உள்ளம் மகிழ்ந்த
அக்காலஆட்சியில்
அமர்ந்த நல்ல மனிதர்கள்
இருந்திருந்தால் ஏக்கத்திலே
பைத்தியம் பிடித்திருக்கும்
இக்கால ஆட்சி கண்டு……\

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்

ஆசையோ ஆசையடி

தேர் ஓடுது தெவோரம்
சேர்ந்தே ஓடுது
திருவிழாக் கூட்டம்…….\

கார் ஓடுது தார் ரோட்டிலே
பின்னாடி துரத்தி ஓடுது
கரும் புகை மூட்டம்………\

நீர் ஓடுது ஓடையிலே
அதனுடன் சேர்ந்தே
ஓடுது துள்ளும் மீன்கள்
கூட்டம்…………..\

நண்டு ஓடுது பொந்தை நாடி
பின்னாடியே பதுங்கி
ஓடுது நரிகள்கூட்டம்……….\

காற்று ஓடுது தடையைப் பாராமல்
இடையில் மோதியே ஆடுது
மரத்தோட்டம்………..\

கல்லுரி வாசலில்
பெண்கள் நடமாட்டம்
அதை நோட்டமிட்டே
சுத்துகின்றன
இளைஞர்கள்
கூட்டம்……………..\

அவளின் வண்டுக் கண்
அவனைப் பார்த்ததுமே
அவன் உள்ளம் போட்டது
கொண்டாட்டம்…………….\

அவள் விட்டு விலகி
நின்றதுமே மனம்
காட்டியது வாட்டம்……..\

சித்திரச் சோலையிலே
அவளின் மதி முகம்
பார்த்ததுமே புத்தி
காட்டியது ஒரு தடு
மாற்றம்………….\

அதை வெளியில்
காட்டாமலே துள்ளிக்
குதித்தான்
முயலாட்டம்……….\

அவள் விரல் சித்திரம் தீட்ட
உள் நெஞ்சில் பாராட்டு
பாடினான்
அருவியாட்டம்…………\

காட்டிக் கொள்ளவும்
முடியவில்லை
கடந்து செல்லவும்
முடியவில்லை
அசையாமல்
நின்று விட்டான்
அடிச்சு ஏற்றிய
ஆணியாட்டம்…….\

கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்