தழல் இலக்கியக் கருத்தாடல் – கார்த்திகை


தழல் இலக்கிய வட்டம் நடத்தும்

கார்த்திகை மாத முழுமதி தின இலக்கியக் கருத்தாடல்


காலம்: 27-11-2012 (முழுமதிதினம்)
நேரம் : காலை 10.00 மணி
இடம் : கலைஅருவி,
116/3, புனித சூசையப்பர் வீதி
பெட்டா, மன்னார்.


தலைமை

திரு. அ.அந்தோணிமுத்து (மூத்த கவிஞர் மன்னார் அமுது)
ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்

நிகழ்வுகள்

01. ஜெ. மரின் லிஷாயினி – உரை: “இளைஞனும் தொலைபேசியும்”
02. ஜெ.கெஷ்ரா லிமா – கவிதை: அன்னை
03. திரு.அ.அந்தோணிமுத்து – சிறுவர் இலக்கியமும் குழந்தைகள் உளவியலும்
03. ஆண்டுக் கணக்கறிக்கை சமர்ப்பித்தல்
04. அறிவோம் பகிர்வோம் – கருத்தாடல்

குறிப்புகள்:

1. 27-28-29/10/2012 ஆகிய தினங்களில் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து தழல் இலக்கியவட்டம் நடத்திய புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டும், உதவிகளை நல்கியும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தழல் இலக்கிய வட்டத்தினரின் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம்.

2. தழல் இலக்கிய வட்டத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட (t-shirt) மேலாடைகள் விற்பனைக்குள்ளன. சிறப்பு விலை ரூ.750.00 .மேலாடைகளை கொள்வனவு செய்தும் இலக்கிய செயற்பாட்டிற்கு
ஆதரவினை வழங்கலாம்.

3. இலக்கியவட்டத்தின் அங்கத்தவரான செல்வி.மொஹமட் சுஜானா அவர்கள் பாலபண்டிதர் பட்டம் பெற்றுள்ளார். அதனையொட்டி சிறு விருந்துபசார நிகழ்வும் இடம்பெறும்.

தங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

“கவியில் உறவாடி” வெளியீட்டு விழா – ஒரு பார்வையும் பகிர்வும்

Quote


Photo Editing: மன்னார் அமுதன்

மன்னார் எழுத்தாளர் பேரவை மற்றும் தழல் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், 10.11.2011அன்று ‘கலை அருவி’ ஒன்றுகூடல் மண்டபத்தில் காலை 10.15 இற்கு ஆரம்பமான “கவியில் உறவாடி” (கவிதைத் தொகுப்பு – ஜீவநதி வெளியீடு) வெளியீட்டு விழாவிற்கு மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவரும் மன்னார் எழுத்தாளர் பேரவையின் போசகருமான அருட்திரு.தமி்ழ்நேசன் அடிகள் தலைமைதாங்கினார். பிரதம அதிதியாக எம்மால் அழைக்கப்பட்டிருந்த வைத்தியக் கலாநிதி திரு.எஸ்.லோகநாதன் அவர்கள் (யாழ்ப்பானத்திலுள்ள) தனது மைத்துணனின் திடீர் மரணச்செய்தியைக் கேள்வியுற்ற பின்னரும் அங்கு புறப்படுவதற்கு முன் எமது விழாவினைச் சிறப்பிக்கும் உயரிய எண்ணத்தோடு விழா ஆரம்பமாவதற்கு முன்னரே நிகழ்விடத்திற்குப் பிரசன்னமாகியிருந்தமை எமக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. எனினும் எமக்கு அது தர்ம சங்கடமான நிலையைத் தோற்றுவிக்கவே, அவரை முற்கூட்டி அனுப்பிவைக்கின்ற எண்ணத்தோடு நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்களை மேற்கொள்வதெனத் தீர்மானித்தோம்.

Continue reading

போரின் பின்னான இலக்கியம் எதை நோக்கி — தோழர் தேவா

இப்போதைக்குப் போர் ஓய்ந்துள்ளது. இனியும் ஒரு போர் வருமா வராதா என்பதை யாரும்திட்டவட்டமாகக் கூற முடியாது. இன்றைய நிலை ஓர் ஆசுவாசம்தான். உயிருக்குப் பயமில்லை என்றநிலை மாத்திரமே .. நாம் எதைக்கோரி நின்றோம் இ இன்றையநிலை திருப்தி அளிக்கிறதா அன்றேல் தற்போதைய நம் தேவைகள் என்ன என்பது பற்றி எல்லாம் நாம் யாரை நோக்கிப் பேசலாம். நம்மைநோக்கி நாம் பேசிக்கொள்ளலாம் அன்றேல் மற்றைய சமூகங்களுடன் பேசலாம். மற்றைய சமூகங்களுடன் பேசலாம் எனில் அச்சமூகம் நம்மிடம் என்ன பேசியுள்ளது என்ன பேசுகின்றது என்பதை அவதானிக்கின்றோமா ?

தோழர் தேவா

போருக்குப்பின்னான கட்டுமான இலக்கியம் என்ற சொல்லாடல் தற்காலங்களில் இலக்கியங்களின் காலக்குறியீடாகப் பதிவாகி வருகிறது. போரின் காலமான சில பத்தாண்டுகளுக்குமுன் நாம் என்னென்ன தேவைகளைப் பதிவு செய்தோம்இ அத்தேவைகளின் அடிப்படையில் இன்றைய நிலை என்ன என்பதனை மீள்பார்வை செய்துகொள்ளப்போகிறோமா ? கடந்துவந்த வழித்தடங்களில் சமூகமாக இ தனிமனிதாக எங்கே நின்றோம். இந்நீண்ட அழிவின் பயணத்தில் இன்றையபுள்ளியில் எங்கு நிற்கின்றோம்.இ இதுபற்றி நாம் பேசப்போகின்றோமா ?புதுஎடுப்பாக இன்று தொடங்கி பேசப்போகிறோமா ? உலகின் பல நாடுகள் நீண்ட தொடர் போர்களைக் கண்டு அதன்பின் தன் சமூக கட்டுமானங்களின் காலத்தில் எவற்றை எல்லாம் எழுதிப்பார்த்தன. என்ற தேடலை மேற்கொண்டு அதுபற்றி நம் பதிவுகளில் பேசப்போகின்றோமா ? எல்லைகளை விரிவாக்கி புதியபரிமாணங்களை அலசி நம் அனுபவங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கப்போகின்றோமா ? அல்லது கால் நடந்து தேய்த்த வழித்தடங்களில் சுலபப் பயணப்பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கப் போகின்றோமா ? என்ன நடந்தது இனி என்ன நடக்கவேண்டும் என்ற திசையை நிர்ணயிக்கப்போகின்றோமா ? நடந்தேறியவற்றின் சரி பிழைகளை மாத்திரம் விவாதித் துக்கொண்டிருக்கப் போகின்றோமா ? எதை நோக்கி நாம் நகர்த்தப்பட்டோம் வீரகோசங்கள் மார்தட்டல்கள் நம்மைச் சரியான வழியில் இட்டுச் சென்றதா அல்லது இருந்ததையும் இழந்து ஏதோ இருப்போம் என்றநிலையை அடைந்தோம் எனப்பார்க்கப்போகின்றோமா ? இவை எல்லாவற்றையும் சேர்த்து இலக்கியத்தின் புதியபோக்கை தொனியை தோற்றுவிக்கப்போகின்றோமா ? அதிகாரத்தை நோக்கிப்பேசல் நிரம்பவே சிக்கல் நிறைந்த இலக்கியப்போக்கு காலம் காலமாக அதிகாரத்தை நோக்கிப் பேசப்பட்டே வந்தது. கட்டுமான இலக்கியப் படைப்பாளிகள் அதிகாரத்தை நோக்கிப் பேசுவார்களா ? எதைஎல்லாம் அதிகாரத்தை நோக்கிப் பேசலாம். படைப்பாளிகளின் எல்லைகளை தீர்மானிப்பது யார் இன்னும் நிறையவே கேட்டுக்கொண்டே போகலாம். . Continue reading