தம்பி பாப்பா

அம்மா! பாப்பா பசியாலே
“அம்மா” என்றே அழுகின்றான்

சும்மா தூக்கிக் கொஞ்சுங்கோ
சுகமாய்ப் பாலை ஊட்டுங்கோ

புட்டிப்பாலைத் தரவேண்டாம்
கெட்ட நோயும் வந்திடுமே

குட்டித் தம்பி பால் குடிக்க
கட்டி அன்பாய் அணையுங்கள்

தாய்ப்பால் நல்லது பாருங்கள்
தம்பி நன்றாய் வளர்வானாம்

நோய்கள் ஏதும் வாராதே
தாய் மேல் பாசம் வளர்ந்திடுமே.
                                — கவிஞர் கலாபூஷணம் . மன்னார் அமுது

 

தோசை

தோசை நல்ல தோசை
அம்மா சுட்ட தோசை

தின்னத் தின்ன ஆசை
கோவிலிலே பூசை

உழுந்தும் மாவும் சேர்த்து
அம்மா சுட்ட தோசை

சுவை நிறைந்த தோசை
சுடச்சுடவே தின்போம்

அப்பாவுக்கு ஐந்து
அக்காவுக்கு மூன்று

எனக்கு மட்டும் இரண்டு
எல்லாம் சேர்த்து பத்து
— கவிஞர் கலாபூஷணம் . மன்னார் அமுது