இன்னும் உன் குரல் கேட்கிறது

தியதலாவை ரிஸ்னாவின் ‘இன்னும் உன் குரல் கேட்கிறது’ கவிதை நூலுக்கான எனது பார்வை  –பஸ்லி ஹமீட்

பஸ்லி ஹமீட்

கவிதை என்ற சொல்லை உச்சரிக்கும்போது மனதில் ஒரு வித இனிமை படர்வதை உணரலாம். எழுத்துக்களின் மிக மென்மையான பகுதியாக கவிதை இருப்பதே அதற்கான காரணமாக இருக்கலாம். எந்தவொரு கடினமான அல்லது சிக்கலான விடயத்தையும் கவிதையினூடாக மென்மையான முறையில் சொல்ல முடியும் அல்லது உணாத்த முடியும். மனதில் பொங்கியெழும் கோபத்தையும் கவிதையினூடாக சாந்தமாக வெளிப்படுத்தலாம். இத்தகைய தன்மை கவிதையில் இருப்பதனாலேயே அது வாசகர்களின் உணர்வுகளுடன் எளிதில் கலந்து விடுகின்றது.

கவிதைக்குப் பொதுவான ஒரு வரைவிலக்கணம் சொல்லப்படாத போதிலும், சாதாரணரமாக சொல்ல வரும் ஒரு விடயத்தை சற்று அழகுபடுத்திச் சொல்லும்போது அது கவிதை என்ற எல்லைக்குள் வந்துவிடுகின்றது. கவிதை பல்வேறுபட்ட வடிவங்களில் எழுதப்படுகின்ற போதிலும் அவற்றில் உள்ள கவித்துவத் தன்மையே வாசகரைக் கவர்ந்திழுக்கும் முக்கிய காரணியாகும். கவித்துவத் தன்மை என்பது வெறும் சந்தங்களில் மட்டுமல்லாது கவிதையில் சொற்களைக் கோர்க்கும் விதத்திலேயே அதிகம் தங்கியுள்ளது எனலாம். கவிதையில் பயன்படுத்தப்படும் சொற்கள் சாதாரணமானவைகளாயினும், குறைந்த சொற்களையே பயன்படுத்தியிருப்பினும் அவை கோர்க்கப்படும் விதத்திலேயே கவிதை அழகு பெறுகிறது. எனவே ஒரு கவிஞனின் திறமையை வெளிக்காட்டும் முக்கிய அம்சம் அக் கவிஞன் கவிதையில் சொற்களைக் கையாளும் விதமே என்று சொல்லலாம். Continue reading